முந்தய பக்கம்

மடிக்கணினி வழங்க எஸ்எப்ஐ கோரிக்கை

23 Feb 2026, 5:35 pm
மடிக்கணினி வழங்க எஸ்எப்ஐ கோரிக்கை
<p><strong>மடிக்கணினி வழங்க எஸ்எப்ஐ கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், பிப்.23 - தமிழக அரசு விலை யில்லா மடிக்கணினி வழங் கும் திட்டத்தில் முதலாம் ஆண்டு முதுநிலை படிப்ப வர்களுக்கும் மடிக்கணினி வழங்குமாறு இந்திய மாண வர் சங்கத்தின் தலைமையில் &nbsp;மாணவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இந் திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் விமல், &nbsp;மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி உள்பட 20க்கும் மேற்பட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தற்போது கல்லூரி இளநிலை இறு தியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினி வழங்குவது வரவேற் கத்தக்கது. 2021 - 22 கல்வியாண்டில் மேல்நி லைப் பள்ளி முடித்து தொழில்முறை கல்வி யில் சேர்ந்தவர்கள் தற்போது இறுதி யாண்டு படிப்பதால் அவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. அதேசமயம் அதே கல்வியாண்டில் படித்து &nbsp;இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்த வர்கள் கடந்த ஆண்டு மூன்றாம் ஆண்டை முடித்து விட்டனர். ஒரே கல்வியாண்டில் படித்த ஒரு பிரிவினருக்கு மடிக்கணினி வழங் கப்படும் நிலையில், இளங்கலை பட்டப்ப டிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்ப டுவது சரியல்ல. எனவே தற்போது இளநிலை &nbsp;பட்டப்படிப்பு முடித்து முதுநிலை முதலாம் ஆண்டில் சேர்ந்து படிப்போருக்கும் தமிழக &nbsp;அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க &nbsp;வேண்டும் என கோரினர். இது குறித்து சம்பந் தப்பட்ட துறைக்கு அனுப்பி உரிய நடவ டிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது என்றும் மாணவர்கள் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram