முந்தய பக்கம்

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மாணவர் சங்கம் பேரணி

11 Aug 2026, 12:16 am
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மாணவர் சங்கம் பேரணி
<p><strong>நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மாணவர் சங்கம் பேரணி</strong></p><p>நாமக்கல், ஆக.10-நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முற்றிலும் விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று பேரணி நடைபெற்றது.தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும், நீட் தேர்விலி ருந்து தமிழகத்தில் விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் தங்கராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. நாமக்கல் சுபாஷ் சந்திர போஸ் சிலையில் இருந்து பூங்கா சாலை வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர்சங்க மாநிலத் தலைவர் மிருதுளா, மாநிலச் செயலாளர் சம்சீர் அகமதுஉள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். முடிவில், மாவட்டத் தலைவர் நிசார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram