முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 Jun 2026, 8:37 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய மாணவர் சங்கம்

மேற்கு வங்கத்தில் ரயில்வே வளாகங்களில் இருந்து நடைபாதை வியாபாரிகள், உழைக்கும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளி யேற்றப்படுவதற்கு எதிராக நடைபெற்ற ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்ற, இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா கைது செய்யப்பட்டதை யும், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலையும் எஸ்எப்ஐ வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆம் ஆத்மி எம்.பி.,சஞ்சய் சிங்

சனாதனம் தொடர்பாக பாஜக ஒட்டுமொத்த நாட்டிற்கே பாடம் எடுக்கிறது. ஆனால் பாஜகவினர் ராமர் கோவிலின் நன்கொடையை கூட சூறையாடி வருகின்றனர். அரசியல் லாபத்திற்காக ராமர் கோவிலை கட்டி, தற்போது நன்கொடை வசூலில் முறைகேட்டை அரங்கேற்றிய பின் ராமர் மீதும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்

பாஜக சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் நாஜியா இலாஹி பொதுவெளியில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தி, 120 கோடி இந்துக்கள் அனைவரும் இந்திய முஸ்லிம்களைத் தனியார் மற்றும் அரசு வேலைகளில் புறக்கணிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுக்கிறார். நாட்டின் நிலைமை மிக மோசமான நிலைக்கு செல்கிறது.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

நீட் வினாத்தாள் விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது. நாட்டின் தற்போதைய தேர்வு முறைகளின் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நம்பிக்கையின்மையை இது பிரதிபலிக்கிறதா? என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram