தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்திடுக! இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்!

1 hour before
உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்திடுக! இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்!

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தெள. சம்சீர் அகமது ஆகியோர் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் கூட்டத் தொடரில் குரல் வாக்கெடுப்பு மூலம் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்ட விதிகளை திருத்தி உயர்கல்வியை தனியாரிடம் தாரை வார்க்கும் தனியார் பல்கலைக்கழகம் திருத்தச் சட்டம் - 2026 நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக அரசாங்கம் ஆட்சியில் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் (2019), மாநிலத்தில் உயர்கல்வித்துறையின் மேம்ப்பாட்டுக்காக புதிதாக பல்கலைக்கழகங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்கிக் கொள்வதற்கான விதிகளை சட்டமாக உருவாக்கியது. இந்த சட்டத்தின் கீழ் மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு 100 ஏக்கருக்குக் குறையாத நிலமும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் நிலையான அறக்கட்டளை நிதியும் தேவைப்பட்டது.

ஏற்கனவே இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை “Brownfield Universities” என்ற வகையில் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான முயற்சி கடந்த ஆண்டு திமுக அரசாங்கமும் மேற்கொண்டு சட்டமன்றத்தில் முன்மொழிந்தது, முன்வைக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் போராட்டத்தின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தற்போது, தவெக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம் முன்பிருந்த திமுக அரசாங்கம் முன்மொழியப்பட்ட திருத்தங்களை விட மோசமானதாகவும் உயர்கல்வியை தனியார் முதலாளிகள் சூறையாடவும் வழிவகுக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க குறைந்தபட்சம் 12 ஏக்கர் நிலமும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர் நிலமும், மற்றபகுதிகளில் 25 ஏக்கர் நிலமும் தேவை எனத் தீர்மானித்துள்ளது. இதற்கேற்ப அறக்கட்டளை நிதித் தேவையையும் 50 கோடியிலிருந்து 25 கோடியாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மற்றும் அரசு பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யாததின் விளைவு, பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை பிரச்சினைகள் போன்ற எண்ணற்ற காரணத்தால் உயர்கல்வி பாதிப்படைந்து வருகிறது. இதனை சரிசெய்ய போதுமான அரசின் அறிவிப்பு இல்லாமல், உயர்கல்வியின் தரத்தையும் நீண்டகால நிதி நிலைத்தன்மையை பாதுகாக்குவும் உருவாக்கப்பட்ட விதிகளை சலுகையாக இந்தளவிற்கு குறைத்து திருத்துவதற்கான அரசின் நோக்கம் கண்டனத்திற்குரியது. அரசின் இச்சட்டத் திருத்த்தின் விளைவு வருங்காலத்தில் பல ஆண்டுகளாக அரசு மற்றும் UGC-யின் மானியங்களை பெற்று வளர்ந்த அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழங்களாக உருமாறும் அபாயமும் உள்ளது. மக்களின் வரிப்பணத்தால் உருவான அரசு உதவி பெறும் கல்லூரிகள் அரசின் பொதுச் சொத்து தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் போதுமான அரசு உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாத சூழலில் பெரும்பாலான மாணவர்கள் தனியார், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் கீழ் பயிலுகின்ற நிலையில், மாநில அரசின் இத்தகைய நடவடிக்கை அதனை மேலும் அதிகப்படுத்தவே செய்யும். கல்வி கட்டண கொள்ளை, தரமற்ற கல்வி மற்றும் தகுதியில்லாத பணியாளர்களை வைத்து தனியார் நிறுவனங்கள் இயங்கவே உதவும்.

அரசு புதிய நவீன உட்கட்டமைப்பு வாய்ந்த அரசு பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கூடிய அரசு பல்கலைக்கழகங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஆசிரியர் மற்றும் ஆய்வக பணியாளர்கள் போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும்; ஆராய்ச்சியை வலுப்படுத்த வேண்டும் மற்றும் உட்கட்டமைப்பு நவீனமாக மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்காகவே தனியாருக்கு தளர்வுகள் என்ற அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தனியார் பல்கலைக்கழகம் சட்டத்திருத்தம் - 2026‌‌ மூலம் அரசுஉயர்கல்வியிலிருந்து வெளியேறி ஒட்டுமொத்தமாக தனியாரிடம் ஒப்படைப்பதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம் இச்சட்டத்திருத்த மசோதாவை ரத்த செய்ய வேண்டும். உயர்கல்வியை வணிகமயமாக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

மேலும், உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலையங்களிலும் நாளை நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.