முந்தய பக்கம்

நீட் தேர்வு ரத்து விவகாரம் எஸ்எப்ஐ நகல் எரிப்பு போராட்டம்

13 May 2026, 9:43 pm
நீட் தேர்வு ரத்து விவகாரம் எஸ்எப்ஐ நகல் எரிப்பு போராட்டம்
<p><strong>நீட் தேர்வு ரத்து விவகாரம் எஸ்எப்ஐ நகல் எரிப்பு போராட்டம்</strong></p><p>மதுரை, மே 13- நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடை பெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு விவ காரத்தையடுத்து, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேர்வை ரத்து செய்துள்ளதாக அறி வித்த நிலையில், ஒன்றிய அரசையும் என்.டி.ஏ. நிர்வாகத்தையும் கண்டித்து இந்திய மாண வர் சங்க மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற இந்த போராட்டத் திற்கு மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குரு கணேஷ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜதுரை, மாவட்டத் தலைவர் டீலன் ஜெஸ்டின் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் பேசிய மாணவர் சங்க நிர்வாகிகள், “தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வு முறைகேடுகளுக்கு தேசிய தேர்வு முகமையின் அலட்சியமே காரணம். நீட், சியூஇடி உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட தேசிய நுழைவுத் தேர்வுகள் கல்வி சமத்துவத்தை பாதிக்கின்றன. குறிப்பாக அரசு பள்ளி, கிரா மப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரி வித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram