பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு மதுரையில் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
9 May 2026, 9:11 pm

பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு மதுரையில் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 9- மதுரை மாநகர் மற்றும் புற நகர் இந்திய மாணவர் சங்கம் சார் பில் பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடை பெற்ற போராட்டங்களால் அமல் படுத்தப்படாமல் தடுத்து நிறுத்தப் பட்டிருந்த பி.எம். ஸ்ரீ திட்டத்தை, தேர்தல் முடிவுகள் வெளியான 2 நாட்களுக்குள் அவசரமாக செயல் படுத்த ஒன்றிய அரசு முயற்சி மேற் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், புதிதாக அமையவிருக்கும் தமிழக அர சுக்கு அழுத்தம் கொடுக்கும் வகை யில், இத்திட்டத்திற்கு உடனடி ஒப்பு தல் வழங்குமாறு ஒன்றிய அரசு கடி தம் அனுப்பியுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.

இதனை கண்டித்து, இத்திட் டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மதுரை குரு தியேட்டர் எதிரில், பெத்தானியாபுரத்தில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்டத் தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார்.

மாநகர் மாவட்டத் தலைவர் டீலன் ஜெஸ்டின் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் சுதர்சனன் கண்டன உரையாற்றினர்.

நிறை வாக மாநகர் மாவட்டச் செயலா ளர் டேவிட் ராஜதுரை பேசினார்.

இதில் மாநிலக் குழு உறுப்பினர் தீபலட்சுமி மற்றும் மாநகர், புற நகர் மாவட்டங்களின் நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.