“ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து தெருவில் போராடுவோம்!” இளைஞர்கள், மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல்
7 Oct 2026, 11:12 pm

“ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து தெருவில் போராடுவோம்!” இளைஞர்கள், மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல்

புதுதில்லிசிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் அக்டோபர் 10 அன்றுபுதுதில்லியில் நடைபெறும் கண்டனப் பேரணியில் திரளாகப் பங்கேற்க இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு இந்திய மாணவர் சங்கம் (SFI) அறைகூவல்விடுத்துள்ளது.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் மூலமாக நாடு முழுவதும் சுமார் 13 கோடி வாக்காளர்களைஇந்தியத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. தேர்தல்ஆணையர்களின் ஒப்புதலின்றித் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாஜகவின் தேர்தல் வெற்றிகளுக்குக் கை கொடுத்துள்ளன.இந்நிலையில், ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைநகர் தில்லியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். குறிப்பாக, மாணவர்களும் இளைஞர்களுமே இந்தப் போராட்டத்தின் முன்கள வீரர்களாக உள்ளனர்.

அமைதியான முறையில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்தின் மீது தில்லி காவல்துறை கடுமையானஅடக்குமுறையை ஏவி வருகிறது. போராட்டக்காரர்கள் மீது தடியடிநடத்துவதுடன், ஆடைகளைக் கிழித்து அத்துமீறுவதுடன் காயங்களையும் ஏற்படுத்துகிறது. இந்தத் தாக்குதலில் இருந்து பத்திரிகையாளர்களும் தப்பிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய

வேண்டும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும், வாக்காளர்களை நீக்கும்ஜனநாயக விரோத நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 10 அன்று ஜந்தர் மந்தர் நோக்கி இடதுசாரி மாணவர்அமைப்புகள் பேரணி நடத்தஉள்ளதாக இந்திய மாணவர் சங்கம் (SFI), அகில இந்திய மாணவர் பெருமன்றம் (AISF), அகில இந்திய மாணவர்கள்கழகம் (AISA), முற்போக்கு மாணவர் சங்கம் (PSU) மற்றும் அகில இந்திய மாணவர் பிளாக் (AISB) ஆகிய 5 இடதுசாரிமாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த அக். 6 அன்று கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன.

மாணவர் சங்கத் தலைவர்கள் அறைகூவல்

இந்நிலையில், புதுதில்லியில் நடைபெறும் பேரணியில் இந்திய இளைஞர்களும் மாணவர்களும் திரளாகப் பங்கேற்க இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:“இந்தியத் தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை இழந்து, நாடு முழுவதும் ஜனநாயக வழிமுறைகளைச் சீர்குலைத்து வரும் விதம் குறித்துப் பெருங்கவலையுடன் இக்கடிதத்தை எழுதுகிறோம். தேர்தல் நடைமுறையின் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் நம்பிக்கையின்மை மிகவும் கவனத்திற்குரிய விஷயமாகும்; இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.தற்போது நடைபெற்று வரும் ‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி’மூலம் அதிக வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகக்கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாகத்தயாரிக்கப்படவில்லை; பல இளம் மற்றும் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதன் மூலம்அவர்களின் வாக்குரிமை மறுக்கப்படுவதாகவே தெரிகிறது. அதேபோல, முதல்முறை வாக்காளர்கள் பலரதுபெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன.

ஜனநாயக மற்றும் தேர்தல் உரிமைகள் மீதான இத்தகைய தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுப்பது மாணவர் அமைப்புகளான நமது கடமை என நம்புகிறோம். ஜனநாயகத்தையும், ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையையும் பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து தெருவில் இறங்கிப் போராட வேண்டும்.ஜனநாயக உரிமைகள் மீதான இத்தாக்குதல்களுக்கு எதிராக, அக்டோபர் 10 அன்றுதில்லியில் மாணவர் மற்றும்இளைஞர்களின் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய மாணவர் சங்கம்முழுமையாகப் பங்கேற்கும்; உங்கள் அமைப்பும் தனது முழு பலத்துடன் எங்களுடன் கைகோர்க்குமாறுகேட்டுக்கொள்கிறோம்.”மேலும், ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என மூன்று முக்கியகோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.