தீக்கதிர் முக்கிய செய்திகள்
26 Sept 2026, 11:20 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய மாணவர் சங்கம்

நாடாளுமன்ற வீதிக்கு அருகே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடத்தப்

பட்ட போராட்டத்தில், மாணவிகள் தில்லி காவல்துறையின

ரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும் உள்ளனர். ஜனநாயகத்தில் அமைதியான முறையிலான போராட்டத்தையும், கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையும் நசுக்க முடியாது.

கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே

பிரதமர் மோடிக்கு பஜனை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேரம் இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் மூலம் ஜனநாயகம் நசுக்கப்படுவது குறித்த தீவிரமான கேள்விகளுக்குப் பதிலளிக்க அவருக்கு நேரமில்லை. அரசுக்கு இக்கட்டான கேள்விகள் எழும்போது பிரதமர் வெளிப்படையாகவே தலைமறைவாகிவிடுகிறார்.

திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி

தேர்தல் ஆணையம் தொடர்பான சர்ச்சைகளுக்கு நடுவே, ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துத் தீர்மானிப்பதற்கான கூட்டம், வரும் செப்டம்பர் 30 அன்று தில்லியில் நடைபெற வாய்ப்புள்ளது.

அலகாபாத் பார்கவுன்சில் யூனியன்

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கே தலைகாட்டாத ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், ஞானேஷ் குமாருக்காகக் களமிறங்குவார்களா என்பது சந்தேகம்தான். வாக்குகளை நீக்க உத்தரவிட்ட மோடியே பஜனை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார் என்றால், ஞானேஷ் குமாரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும்.