இந்திய மாணவர் சங்கத்தினர் கடலூரில் முற்றுகைப் போராட்டம்
16 May 2026, 2:12 am
<p><strong>இந்திய மாணவர் சங்கத்தினர் கடலூரில் முற்றுகைப் போராட்டம்</strong></p><p>நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்தும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கடலூர் தலைமை தபால் நிலையத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இணைச் செயலாளர் சிவன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சௌமியா, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.</p>
