முந்தய பக்கம்

சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

9 May 2026, 2:41 am
சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஒன்றிய அரசு தமிழகத்தின் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை பயன்படுத்தி பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதி இருப்பதை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் திருமாள் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சபரி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட இணைச் செயலாளர் சிவநந்தினி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram