உயிரைப் பறிக்கும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும்! ஆளுநர் மாளிகையை எஸ்எப்ஐ முற்றுகை
20 Jun 2026, 11:44 pm

உயிரைப் பறிக்கும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும்! ஆளுநர் மாளிகையை

எஸ்எப்ஐ முற்றுகை

சென்னை, ஜூன் 20 - ஏழை - நடுத்தரக் குடும்ப மாண வர்களின் மருத்துவர் கனவைச் சிதைக்கும், கல்வியை வியாபாரம் ஆக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் முறைகேடுகளை பொறுப்பேற்று ஒன்றிய கல்விய மைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், இந்திய மாணவர் சங்கம் தலைமையில் நாடு முழு வதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டிலும், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சனிக்கிழமையன்று பல்வேறு மாவட்டங்களில் போரா ட்டங்கள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக, தலைநகர் சென்னை யில், இந்திய மாணவர் சங்கம் சார் பில் ஆளுநர் மாளிகையை முற்றுகை யிடும் போராட்டம் நடைபெற்றது.

மாணவர்களை தடுத்து கைது செய்த போலீசார் இதனிடையே, போராட்ட முனைக்கு மாணவர்கள் செல்வ தற்கு முன்னதாகவே, அவர்களை ஒன்றுகூட விடாமல், பல்வேறு இடங்களில் தடுத்துக் கைதுசெய்த காவல்துறை, அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவ - மாண வியரை சரமாரியாகத் தாக்கி அரா ஜகத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஆளுநர் மாளிகை யை முற்றுகையிடும் போராட்டம் நடத்த காவல்துறை சின்னமலை வேளச்சேரி சாலையில் இடம் ஒதுக்கி இருந்தது.

அங்கு போராட்டம் நடத்த பேருந்தில் வந்த மாணவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். மாணவிகளை ஆண் காவலர்கள் மோசமான முறையில் அணுகினர். இதனால் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். மிருதுளா தலைமை யில் மாணவர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி னர். அ

ப்போது தள்ளுமுள்ளு ஏற் பட்டது. அப்போது, மாணவர்களை காவலர்கள் சரமாரியாக தாக்கி கைது செய்தனர். மாணவர்கள் காயம்; எஸ்எப்ஐ கண்டனம் காவல்துறையின் அராஜகமான கைது நடவடிக்கையால் மாணவர் கள் பலரும் காயமடைந்தனர். தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் லோகேஷின் கை மூட்டு (டிஸ்லொகேசன்) நழுவியது.

ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய எஸ். மிருதுளா, “ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவ தற்கு கூட அரசு இடம் ஒதுக்க மறுக்கி றது. மாணவர்களை ஆடு, மாடுகளை போன்று நடத்தியதுடன், மாணவி களை ஆண் காவலர்கள் பிடித்து இழுத்து, அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

முறையாக போராட்டம் நடத்த வந்த மாணவர்களை காவல் துறையினர் அராஜகமாக தடுக்கின்ற னர்” என்று குற்றம் சாட்டினார். நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் “நீட் தேர்வில் ஏராளமான முறை கேடு நடக்கிறது. தொடர்ந்து மாண வர்கள் உயிரிழக்கின்றனர். ஹால் டிக்கெட்டை பலரால் டவுன்லோட் செய்ய முடியவில்லை.

இங்குள்ள ஒரு மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையத்தை ஒதுக்கி உள்ள னர். அபுதாபி சென்று எப்படி தேர்வு எழுத முடியும்?” என்று கேள்வி எழுப்பிய மிருதுளா, நீட் தேர் வையே முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், என்டிஏ-வை கலைக்க வேண்டும், தேர்வுகளில் நடைபெறும் குளறுபடி, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.