தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணிப்பதா? சென்னை, கோவையில் எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்

19 Aug 2026, 9:15 pm
மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணிப்பதா? சென்னை, கோவையில் எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணிப்பதா? சென்னை, கோவையில் எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர், ஆக. 19-மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணித்து முடக்கும் வகையில் கல்லூரி கல்வி இயக்குநர் பிறப்பித்தசுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) சென்னை, கோவை உட்பட பல்வேறுஇடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை மற்றும் மாநிலக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா தலைமையிலும் கோவை மண்டல கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பு மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது தலைமையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கல்லூரிக் கல்வி இயக்குநரின் உத்தரவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

கோவை ஆர்ப்பாட்டத்தின் போது, தௌ. சம்சீர் அகமது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஆகஸ்ட் 17 அன்று கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கை ஜனநாயக விரோதமானது. இடதுசாரி மாணவர் அமைப்புகளும் சிஜேபி கட்சியும் நடத்தும் போராட்டத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் தடுக்க கல்லூரி முதல்வர்களுக்கு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14-இல் தமிழக தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலேயே இது அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போராட்டத்தால் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு பாதிக்கப்பட்டது? பாஜகவுக்கு எதிரான அமைப்புகளை முடக்க நினைக்கும் தமிழக தலைமைச்செயலாளர், தவெக அரசின் செயலாளரா அல்லது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் பணியாற்றுகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று சம்சீர் அகமது வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.