முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தை கைவிட வலியுறுத்தி

10 May 2026, 12:24 am
ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தை கைவிட வலியுறுத்தி
<p>ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நிசார், செயலாளர் தங்கராஜ், இணைச் செயலாளர்கள் சதீஷ்குமார், பச்சமுத்து,</p><p>மாவட்ட செயற்குழு உறுப்பினர் சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், ஈரோடு ஜவான் பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் தசரதன் தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் த.நவீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஏ.வசந்த், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், அச்சுதன், விஷ்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram