தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஎம்ஸ்ரீ திட்டம்: ஒப்புதல் அளிக்க கட்டாயப்படுத்துவதா? இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்!

9 May 2026, 2:12 am
பிஎம்ஸ்ரீ திட்டம்: ஒப்புதல் அளிக்க கட்டாயப்படுத்துவதா? இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்!

பிஎம்ஸ்ரீ திட்டம்: ஒப்புதல் அளிக்க கட்டாயப்படுத்துவதா? இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம்!

சேலம், மே 8- ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி யும், தேசிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் தழு விய நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

ஒன்றிய அரசின் நேரடி நிதியுத வியுடன் நாடு முழுவதும் 14, 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிஎம்ஸ்ரீ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் கூறப்பட் டுள்ள தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாடு என்பது, மாணவர்களை மீண்டும் அவர்களின் பாரம்பரிய சாதியத் தொழில்களுக்கே தள் ளும் ’குலக்கல்வி’ முறையை மறை முகமாக புகுத்தும் முயற்சியா கும்.

இத்திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக ளுக்கு தேவையற்ற முக்கியத்து வம் அளிக்கப்படுவதாகவும், இது மாநில மொழிகளின் உரிமைக ளைப் பறித்து ’மும்மொழிக் கொள் கையை’ திணிக்கும் செயல் என் றும் மாணவர்கள் சாடினர்.

கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலை யில், மாநில அரசின் பள்ளிகளை தன்னிச்சையாக தனது கொள் கைக்கு கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயல்வது கூட்டாட்சித் தத்துவத் திற்கு எதிரானது.

இத்திட்டத்தில் இணைய ஒப்பு தல் வழங்காத தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்து அழுத்தம் கொடுப் பது கண்டிக்கத்தக்கது.

இரு மாநில தலைமை செயலாளர்களும் 48 மணி நேரத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண் டும் என ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் ஏதேச்சதிகார போக்கை கண் டித்து, பிஎம்ஸ்ரீ திட்ட அரசாணை நகல்களை மாணவர்கள் தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கல்வி என்பது வர்ணா சிரம முறைக்கோ அல்லது குறிப் பிட்ட மொழிக்கோ சாதகமாக இருக் கக்கூடாது என முழக்கங்கள் எழுப் பப்பட்டன.

சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் டார்வின் தலைமை தாங்கினார்.

இதில் சேலம் மாவட்டச் செயலாளர் பவித்ரன், தருமபுரி மாவட்டச் செய லாளர் ஸ்டாலின், மாவட்ட துணைத் தலைவர் கோகுல், செயற்குழு உறுப்பினர் ரிஷி உள்ளிட்ட ஏராள மான மாணவர்கள் கலந்து கொண் டனர்.

திருப்பூர் ஒன்றிய பாஜக அரசின் முடிவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாணவர் சங்க நிர்வாகி காதர் தலைமை ஏற்றார்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் விமல் ராஜ், மாவட்டச் செயலாளர் மணிகண் டன் ஆகியோர் கண்டன உரையாற் றினர்.

மாணவர் சங்கத்தின் நிர்வாகி கள் சுஜிதா, புனிதன், ஆனந்த், ரஜிதா, முகிலன், கலையரசன் உட் பட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.