நீட் முறைகேடு - கல்வித்துறை சீரழிவு என்.டி.ஏவைக் கலைக்க வலியுறுத்தி மாணவர்கள் நாடு தழுவிய போராட்டம்
18 Jul 2026, 9:07 pm

நீட் முறைகேடு - கல்வித்துறை சீரழிவு என்.டி.ஏவைக் கலைக்க வலியுறுத்தி மாணவர்கள் நாடு தழுவிய போராட்டம்

புதுதில்லி, ஜூலை 18- தேசிய தேர்வு முகமையின் (NTA) நம்பகத்தன்மையற்ற செயல்பாடுகள் மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் நாடு தழுவிய போ ராட்டங்களை முன்னெடுத்துள்ளது. நீட் (NEET-UG) தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுதல் மற்றும் ஒன்றிய அரசின் கல்வித்துறை கொள்கைக ளுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் தனது கடுமையான கண்ட னங்களைப் பதிவு செய்துள்ளது.

நீட் தேர்வில் தொடரும் குளறுபடிகள்: என்.டி.ஏ-வின் தோல்வி

சமீபத்திய நீட்-யுஜி மறுதேர்வு முடிவுகள் குறித்து இந்திய மாணவர் சங்க மத்திய நிர்வாகக்குழு வெளி யிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில், என்.டி.ஏ-வின் நிர்வாகத் தோல்விகள் அம்பலமாகியுள்ளன. மே 3-ம் தேதி நடைபெற்ற தேர்வில் 22,05,035 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், ஜூன் 21-ம் தேதி நடைபெற்ற மறு தேர்வில் 19,99,895 மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சரியாக 2,79,848 மாணவர்கள் மறுதேர்வில் பங்கேற்கவில்லை என்பதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தத் தரவு, உயர் கல்வியிலி ருந்து மாணவர்கள் திட்டமிட்டு விலக் கப்படுவதையும், வணிக மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதா யத்திற்காக ஒன்றிய அரசு கல்வி முறை யைச் சிதைப்பதையும் காட்டுகிறது. இந்தத் தேர்வு முறைகேடுகளால் மனமுடைந்து இதுவரை 21 மாண வர்கள் தற்கொலை செய்துகொண் டுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட் டுள்ள இந்திய மாணவர் சங்கம், தேர்வு நடத்தும் தகுதியற்ற அமைப்பாக என்.டி.ஏ மாறியுள்ளதாகச் சாடியுள்ளது. எனவே, நம்பகத்தன்மையை இழந்த என்.டி.ஏ-வை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும், இந்தத் தோல்வி க்கு முழு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட எழுச்சி பேரணி

இந்த விவகாரங்களை முன்னி றுத்தி, ஜூலை 13 முதல் 15 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கம் மத்திய நிர்வா கக் குழு கூட்டத்திற்கு முன்னதாக, 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்டப் பேரணி நடைபெற்றது. இதில் இந்திய மாண வர் சங்க அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி, பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, துணைத்தலை வர் சுபாஷ் ஜாக்கர் மற்றும் இணைச் செயலாளர் ஐஷி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார் யா, நீட் வினாத்தாள் கசிவு, சி.பி.எஸ்.இ மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள் மற்றும் யு.ஜி.சி-நெட் தேர்வுக் குழப் பங்கள் அனைத்தும் தனிப்பட்ட தோல்விகள் அல்ல, அவை கல்வித் துறையின் மீதான திட்டமிட்ட தாக்குத லின் அறிகுறிகள் என்று சாடினார்.

பொதுக் கல்வியைக் காக்க உறுதியேற்பு

கல்வித் துறையை வணிகமய மாக்குவதையும், பொது நிறுவனங்க ளை பலவீனப்படுத்துவதையும் எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் தீவிரமாகப் போராடும் என்று ஆதர்ஷ் எம். சாஜி எச்சரித்தார். ஆயிரக்கணக் கான அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி யிலிருந்து வெளியேற்றப்படுவதை யும் அவர் சுட்டிக்காட்டினார். ஆந்திர மாநில இந்திய மாணவர் சங்கம் செயலாளர் பிரசன்னா குமார், மாநில அரசின் கல்வி விரோதப் போக்கையும் கடுமையாக விமர்சித் தார். சுமார் ரூ.7,000 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதை யும், அரசாணை 77-ஐத் திரும்பப் பெறாததையும் அவர் சுட்டிக்காட்டி னார். கல்வித்துறையின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யவும் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடும் என்று அவர் உறுதி அளித்தார். நீட் முறைகேடுகளுக்கும், கல்வித்துறையின் சீரழிவிற்கும் எதிராக நாடு முழுவதும் மாணவர்க ளைத் திரட்டி, நீதிக்காகவும், பொறுப்புக் கூறலுக்காகவும் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தும் என்று அறிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பணயம் வைத்து கல்வித்துறையைச் சிதைக்கும் ஒன்றிய அரசின் இத்த கைய கொள்கைகளை முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. கல்வி என்பது உரிமை, அது வணிகப் பொருள் அல்ல என்பதை வலியுறுத்தி, வரும் நாட்களில் போ ராட்டங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இந்திய மாணவர் சங்கம் தீர்மானித்துள்ளது.