நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
13 May 2026, 9:45 pm

நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

திருவனந்தபுரம், மே 13- மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தலைமை யில் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வில் நிலவும் அலட்சியத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, அதற்குக் காரணமான வர்களைக் கைது செய்வது தேசிய தேர்வு முகமையைக் கலைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் போரா ட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளம் கேரளத்தின் மாவட்ட மையங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் தபால் நிலை யங்களை நோக்கிச் சென்ற பேரணி யின் மீது காவல்துறை தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியது.

போராட்டக்காரர்கள் எந்தக் காரணமும் இன்றி காவல்துறை யினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட னர்.

மேலும், திருவனந்தபுரத்தில் ஏஜீஸ் அலுவலகத்தை நோக்கி எஸ்எப்ஐ நடத் திய பேரணியின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிக ளைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தி னர்.

கொல்லத்தில் போராட்டப் பேரணியை தொடங்கி வைத்துப் பேசிய எஸ்எப்ஐ மாநிலச் செயலாளர் பி.எஸ். சஞ்சீவ், ஒன்றிய அரசு முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு சேவகம் செய்து வருவதாகக் கூறினார்.

தில்லி முறைகேடுகள் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாயன்று தில்லியில் உள்ள கல்வி அமைச்சகத்தை நோக்கி எஸ்எப்ஐ ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணி யை தில்லி காவல்துறை மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது.

மாணவிகள் உட்பட பலரை காவல்துறையினர் வலுக்கட்டாய மாக இழுத்துச் சென்றனர்.

இதே போல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எஸ்எப்ஐ தலைமையிலான மாணவர்கள் போராட்டங்கள் ஒடுக்கப் பட்டன.