மாவட்டங்கள் தோறும் உருவான ‘ஜந்தர் மந்தர்’ களம் ‘இரவே விழித்தெழு! நாடே விழித்தெழு!’ போராட்டம் சென்னையில் துவங்கியது!
24 Jul 2026, 8:58 pm

மாவட்டங்கள் தோறும் உருவான ‘ஜந்தர் மந்தர்’ களம் ‘இரவே விழித்தெழு! நாடே விழித்தெழு!’ போராட்டம் சென்னையில் துவங்கியது!

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கவும் அழைப்பு

சென்னை, ஜூலை 24 -நாடு முழுவதும் ‘ஜந்தர் மந்தர்’ போராட்டக்களத்தை விரிவு

படுத்தும் வகையில், இந்திய மாணவர் சங்கம் அறிவித்த ‘இரவே விழித்தெழு! நாடே விழித்தெழு!’ போராட்டம் வெள்ளிக் கிழமையன்று துவங்கியது.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தில், ‘நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு’ என்று அறிவித்திருக்கும் தமிழக முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய மாணவர் சங்கம் நாடு தழுவிய அறைகூவல்

நீட் தேர்வுக்கு எதிராக தில்லியில் நடந்து வரும் போராட்டத்தைஒன்றிய பாஜக அரசு ஒடுக்கி வருகிறது. இதற்கெதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. தமிழகத்தில் சாலை மறியல், ரயில் மறியல், வகுப்புப் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வடிவங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜூலை 24 முதல் ‘ஜந்தர் மந்தர்’ போன்ற போராட்டக்களங்களை உருவாக்குமாறு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது.

தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

அமைதியான முறையில் போராடும் மாணவர்கள், பெண்கள் மீது தில்லி காவல் துறையும், துணை ராணுவமும் கொடூரமானத் தாக்குதல்களை நடத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். இதில் தொடர்புடைய அனைத்துக் காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்வதோடு உயர்மட்ட நீதி விசாரணை நடத்த வேண்டும்.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும், நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள், வாலிபர், மாதர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித் திருந்தன.

மாவட்டங்கள் தோறும் ஜந்தர் மந்தர் களம்!

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் ‘ஜந்தர் மந்தர்’ களம் அமைத்து இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். தலைநகர் சென்னையில் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘இரவே விழித்தெழு, நாடே விழித்தெழு’ இரவுக் காவல் போராட்டம் வெள்ளிக்கிழமையன்று துவங்கியது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது, “தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் எஸ்எப்ஐ தலைமையில் ஜூலை 24 அன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியுள்ளோம். ‘தில்லி ஜந்தர் மந்தர்’ போராட்டத்தை ஆதரித்து, சென்னை ‘ஜந்தர் மந்தரை’ உருவாக்கி போராட்டத்தை தொடர்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டப் பெயர்களில் ‘ஜந்தர் மந்தர்’ உருவாக்கப்பட்டு போராட்டம் நடைபெறுகிறது.

அரசியல் வேறுபாடுகள் கடந்து அணிதிரள வேண்டும்

2017-லிருந்து நீட்டிற்கு எதிராக போராடுகிறோம். இன்றைக்கு இந்தியாவே நீட்டிற்கு எதிராக எழுந்துள்ளது. அதனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையும் இந்த போராட்டக் களத் திற்கு அழைக்கிறோம். தமிழ்நாட்டின் குரலாக இணைந்து எதிரொலியுங்கள் என அழைக்கிறோம். மாணவர்கள், வாலிபர்கள் அரசியல் வேறுபாடுகளை களைந்து தமிழ்நாட்டின் குரலாக ஒலிக்க அனைவரையும் அழைக்கிறோம்” என்று கூறினார்.

வாலிபர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் எஸ். கார்த்திக் கூறுகையில், “காவல்துறையின் அடக்குமுறையை மீறி 5-ஆவது நாளாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம். சென்னையில் காவல்துறையின் அனுமதியோடு போராட்டக்களத்தை உருவாக்கி உள்ளோம். இரவு முழுவதும் போராட்டம் தொடரும். மாநிலம் முழுவதும் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் தொடரும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!

விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை நிராகரிக்கி றோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் ஊழல், முறைகேடுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தில்லியில் போராடுகிறவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை நிராகரிக்கி றோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் ஊழல், முறைகேடுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தில்லியில் போராடுகிறவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.