தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்துக! முதல்வரிடம் இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் நேரில் முறையீடு

19 May 2026, 9:11 pm
தமிழ்நாட்டில் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்துக! முதல்வரிடம் இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் நேரில் முறையீடு

தமிழ்நாட்டில் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்துக! முதல்வரிடம் இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் நேரில் முறையீடு

சென்னை, மே 19 - தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அக மது உள்ளிட்ட நிர்வாகிகள், திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். 29 கோரிக்கைகள் அடங்கிய கடிதத் தையும் முதலமைச்சரிடம் அளித்தனர்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:

தமிழ்நாட்டில் அனைத்து கல்வி நிலையங் களிலும் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்த வேண்டும்; மக்களுக்கான ஜனநாயக அரசிய லைத் தேர்ந்தெடுக்கவும், கூட்டு செயல்பாட்டின் வழியாக அதனை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்கவும் மாணவர் பேரவை தேர்தல் தேவைப்படுகிறது. எனவே கால் நூற்றாண்டாக நிறுத்தி வைத்துள்ள அனைத்துக் கல்லூரி மாண வர் பேரவை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய கல்விக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது!

மாநில கல்வி உரிமையை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கை- 2020ஐ, தமிழ்நாடு அரசு ஒருபோதும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். தேசிய கல்விக் கொள்கை- 2020ஐ அமல்படுத்திய மாநிலங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. இது கல்வியை மத்தியத்துவப்படுத்துவ தோடு, கல்வியை காவிமயம் மற்றும் வணிகமய மாக்குகிறது. முன்பு இருந்த திமுக அரசு வலிமை யாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் இதற்காக மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரி வித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கையை (NEP -2020)தமிழ் நாட்டில் அனுமதிக்கக்கூடாது.

‘நீட்’டை ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்!

நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வால் தமிழ்நாட்டில் அனிதா துவங்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக நீட் தேர்வில் குளறுபடிகள், நிர்வாக தோல்விகள் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக 2016 முதல் மாணவர் அமைப்புகள், வாலிபர் அமைப்புகள், கல்வியாளர்கள் பல போராட்டங்களை முன்னெ டுத்து வருகின்றனர். இதில் பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

விடுதி மாணவர்களின் உணவுப்படியை உயர்த்துக!

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 3054 எஸ்சி- எஸ்டி மற்றும் ஓபிசி விடுதிகளில் 2 லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் தங்கிப் பயின்று வரு கின்றனர். அவர்களுக்கு தற்போது வழங்கி வரக் கூடிய உணவுப் படி, என்பது பள்ளி மாணவர் களுக்கு மாதத்திற்கு ரூ. 1,400-ம் கல்லூரி மாணவர் களுக்கு என ரூ. 1,500-ம் வழங்கப்படுகிறது. இந்த உணவுப்படியானது மாணவர்களுக்கு தர மான உணவை வழங்குவதற்கு நிச்சயம் போதாது. எனவே, அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுப்படியை மாதம் ரூ. 2,500 ஆகவும் கல்லூரி மாணவர் களுக்கு ரூ. 3,000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். விடுதிகளில் தரமான உணவு, சுத்த மான கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், இரவுநேர காவலாளி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும்.

ஒருங்கிணைந்த கிச்சன் திட்டத்தை திரும்பப் பெறுக!

தமிழ்நாட்டில் மாணவர் விடுதிகளில் பகுதி யளவு அமல்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கிச்சன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்த திட்டத்தால் மாணவர்களுக்கு தரமான உணவு, நேரத்திற்கு உணவு என்பது கேள்விக்குறியாகி விடும். பலர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே சென்னை, திருச்சி உள்ளிட்ட மாநக ராட்சிகளில் செயல்பாட்டில் உள்ள இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்!

சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழ கங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இது பல்கலைக்கழகங்களை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடி யில் சிக்கித் தவிக்கும் பல்கலைக் கழகங்கள் கல்விக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது மாணவர்களை பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கும். எனவே, தமிழ்நாடு அரசு துணைவேந்தர்களை நியமிக்க வழிவகை செய்ய வேண்டும்.

வேந்தராக முதல்வர்

பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிக்கும் மசோதா மீதான வழக்கை தவெக அரசும் தொடர வேண்டும். ஆர்எஸ்எஸ் சார்பு ஆளுநர்கள் கையில் இருந்து பல்கலைக்கழகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

சட்டம்- பொறியியல் கல்லூரி

மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி, ஒரு பொறி யியல் கல்லூரி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில் இதனை தொடங்க வேண்டும். அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

கல்வி உதவித்தொகை

அனைத்து கல்லூரி மாணவர்களும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை, தேர்வு கட்ட ணம் செலுத்துவதற்கு முன்பே வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும். முதல் தலைமுறை மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பல மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக வருவ தில்லை. கல்வி உதவித் தொகையை நம்பித்தான் பல மாணவர்கள் அரசு கல்லூரிகளில் படித்து வரு கின்றனர். இந்த உதவித்தொகை பிரச்சனையை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்த்துக!

மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்திட வேண்டும். தமிழ்நாடு அரசு மையப் படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையம் அமைத்து ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (Research and Development) கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறை

அரசுப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரி யர் பற்றாக்குறையை நீக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தமிழ் நாடு கல்வி நிலையங்களில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

உட்புகார் கமிட்டி வேண்டும்

அனைத்து கல்வி நிலையங்களில் உட்புகார் கமிட்டியை (Internal Complaint Committee) அமைக்க வேண்டும். ஐசிசி கமிட்டி, புகார் கமிட்டி யாக மட்டும் செயல்படாமல், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற கல்வி நிலையத் தில் மாணவிகள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படும் கமிட்டியாக செயல்படுத்த வேண்டும். உட்புகார் கமிட்டி இருக்கும் கல்வி நிலையங்களில், அந்த கமிட்டி, நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படாமல், பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவாக செயல்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். அனைத்துக் கல்வி நிலையங்களிலும் மாண வியர்க்கு மாதந்தோறும் நாப்கின் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். முறையான அடிப்படை வசதிகள் மற்றும் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் அமைக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவியர் மற்றும் அனைத்து கல்வி நிலையத்தி லும் மாணவியர்க்கு ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும். பொதுவாக மாணவியர்க்கு இரத்தசோகை போன்ற ஊட்ட சத்து குறைபாடுகள் அதிகமாகி இருப்பது குறிப் பிடத்தக்கது.

அரசு கல்லூரியாக மாற்றுக!

பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் இலவச வைஃபை வசதி அமைத்து தர வேண்டும்.

இடஒதுக்கீட்டை உயர்த்துக!

ஒன்றிய அரசு கைவிட்ட கல்வி உதவித் தொகையை மாநில அரசு வழங்கிட வேண்டும். மருத்துவம் மற்றும் மற்ற தொழில்முறை படிப்பு களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சத விகித இடஒதுக்கீட்டை 10.5 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

இருமொழிக் கொள்கை

இரு மொழி கொள்கை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். தொழில்முறை படிப்புகளுக் கான கல்வி நிலையங்கள் அமைந்து இருக்கும் மாவட்டங்களை சார்ந்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும். ஒரு கல்லூரி ஒரு மாவட்டத் தில் அமைவது அந்த மாவட்ட மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். மாநில பல்கலைக்கழகங்கள் மீது, இந்திய உயர்கல்வி ஆணையம் (Higher Education Commission of India - HECI) மூலம் ஒன்றிய பாஜக அரசு அதன் ஆதிக்கத்தை செலுத்தி மாநில பல்கலைக்கழக நடைமுறை மற்றும் கல்வி திட்டத்தை சிதைக்க முயற்சிப்பதை தடுக்க வேண் டும். பேராசிரியர் மற்றும் அரசு கல்வி நிலைய ஊழியர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கை களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்த வேண்டும்

விலையில்லா மடிக்கணினி கல்லூரி முத லாம் ஆண்டு மாணவர்களுக்கு வருடா வருடம் தர வேண்டும். கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய மனநிலையை ஒழிக்க நீதியரசர் சந்துரு அவர்களின் தலைமையில் போடப்பட்ட குழுவின் அறிக் கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனி யார் பள்ளிகளில் வழங்கப்படும் 25 சதவிகித இட ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை தடைபடாமல் ஆண்டுதோறும் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 65 கல்லூரி களில் நிரந்தர முதல்வர் பணியிடம் காலியாகவே உள்ளது. இதனால் ஆய்வு மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் உதவித்தொகை பெறுவது உள்ளிட்ட நிர்வாக ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். எனவே உடனடியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதல்வர் பணியிடத்தை நிரந்தரமாக நிரப்ப வேண்டும். தனியார் சட்டக்கல்லூரிகளை முறையாக கண்காணிப்பதையும், அரசு நிர்ணயிக்கும் கட்ட ணம் வசூலிக்கப்படுவதையும், நன்கொடைகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்ப தையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மாணவர் சங்க மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.