அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் புகுந்து மாணவ தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் எம்எஸ்எப் குண்டர்கள் அட்டூழியம் ; இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்
31 Oct 2026, 8:58 pm

அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் புகுந்து மாணவ தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் எம்எஸ்எப் குண்டர்கள் அட்டூழியம் ; இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

மலப்புறம்கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம்(எஸ்எப்ஐ) அனைத்து இடங்களையும் (ஒன்பது) கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. யுடிஎஸ்எப் (ஐக்கிய ஜனநாயக மாணவர் முன்னணி - எம்எஸ்எப் (முஸ்லீம் லீக்) - கேஎஸ்யு (காங்கிரஸ்)) கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. படுதோல்வியைச் சந்தித்தன. இந்த தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாமல், பல்கலைக்கழக வளாகத்திலேயே எம்எஸ்எப் அமைப்பின் குண்டர்கள் எஸ்எப்ஐ நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்தஎஸ்எப்ஐ நிர்வாகிகள், மலப்புறம் டிஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

பலத்த காயங்கள்

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை காண எஸ்எப்ஐ மலப்புற மாவட்டச் செயலாளரும், கேரள

மாநில இணைச் செயலாளருமான அடில், எஸ்எப்ஐ மலப்புற மாவட்டத் தலைவருமான சுஜின் ஆகியோர் டிஎம்எஸ் மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது மருத்துவமனைக்குள் புகுந்த முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு (எம்எஸ்எப்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் அடில், சுஜின் மீது தாக்குதல் நடத்தி,இருவரையும் கொல்ல முயன்றனர். இந்தத் தாக்குதலில் அடிலுக்கு தலையிலும், சுஜினுக்கு தலை மற்றும் மூக்குப் பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

கண்டனம்

இந்த பயங்கரவாத வன்முறையை இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்கழு வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,”எம்எஸ்எப் - இந்திய யூனியன் முஸ்லிம்லீக் குண்டர்கள் மலப்புறத்தில் உள்ள டிஎம்எஸ் மருத்துவமனைக்குள் புகுந்து தோழர்கள் அடில், சுஜின் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைக் கொலைசெய்ய முயன்றனர். தாக்குதல்நடத்தியவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு வரையிலும் ஊடுருவினர். அங்குப் பணியிலிருந்த மருத்துவர் உடனடியாகத் தலையிட்டுத் தாக்குதலைத் தடுத்ததால் சுஜின் உயிர் தப்பினார். பிற நோயாளிகளின் கண்முன்னே இந்த அச்சுறுத்தும்வன்முறைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

எம்எஸ்எப் மலப்புற மாவட்டத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் தலைமையிலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரியவருகிறது. மாநில அரசும், கேரள காவல்துறையும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டகுற்றவாளிகள் மீது எவ்விதத்தாமதமுமின்றி உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனகடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த கொடூரச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தன.

8 பேர் மீது வழக்கு

சிபிஎம், எஸ்எப்ஐ கண்டனங்கள் காரணமாக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் புகுந்து உபகரணங்களைச் சேதப்படுத்தியது மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தியது தொடர்பாக எம்எஸ்எப் மாவட்ட நிர்வாகிகள் உட்பட8 பேர் மீது தேஞ்ஞிப்பலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கைது செய்யப்படவில்லை. கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பு தான் எம்எஸ்எப் என்பது குறிப்பிடத்தக்கது.