தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

11 Jul 2026, 10:44 pm
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி  விலக வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
<p><strong>ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 11- நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி திருப் பூரில் இந்திய மாணவர் சங்கத்தி னர் மண்டல அளவிலான உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழு வதும் அரங்கேறி வரும் தொடர் முறைகேடுகள், குளறுபடிகள் மற்றும் வினாத்தாள்கள் கசிவு ஆகி யவற்றை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மண்டல அள வில் ஐந்து மையங்களில் உண்ணா விரதப் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மையத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு முறையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேர்வு நடைமுறை களில் தொடர்ச்சியாக பெரும் குளறுபடிகள் நடந்து வருவதால், அதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது போல, பிளஸ்-2 மதிப்பெண்களின் அடிப் படையிலேயே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும். டில்லியில் அமைதியான வழியில் போராடிய காக்ரோஜ் ஜனதா பார்ட்டி இளை ஞர்களை ஒடுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத் தலைவர் ந. விமல்ராஜ் தலைமையில் நடை பெற்ற போராட்டத்திற்கு, மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பாவேல் வரவேற்றார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் திருப்பூர் மாவட்டத் தலை வர் க.நிருபன் சக்கரவர்த்தி போராட்டத்தை வாழ்த்திப் பேசி னார். திருப்பூர் மாவட்டச் செயலா ளர் ச.மணிகண்டன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சா.பிரவீன், மாநில துணைத் தலைவர் பவித் ்ரன், நாமக்கல் மாவட்டச் செயலா ளர் தங்கராஜ், சேலம் மாவட்டத் தலைவர் டார்வின், ஈரோடு மாவட்டச் செயலாளர் நவீன், ஈரோடு மாவட்டத் தலைவர் தசர தன், தருமபுரி மாவட்டத் தலைவர் ஸ்டாலின், நீலகிரி மாவட்ட முள் னாள் தலைவர் சுகந்தன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். இந்த உண்ணாவிரதப் போராட் டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர் சங்க முன்னணி ஊழியர்கள் பங் கேற்றனர். இந்திய மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் ஆனந்த் போராட்டத்தை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.