‘நீட்’ தேர்வு ரத்து கோரி எஸ்எப்ஐ உண்ணாநிலைப் போராட்டம்!
11 Jul 2026, 9:32 pm

‘நீட்’ தேர்வு ரத்து கோரி எஸ்எப்ஐ உண்ணாநிலைப் போராட்டம்!

சென்னை, ஜூலை 11 - நீட் தேர்விலிருந்து தமிழ கத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சனிக்கிழமையன்று (ஜூலை 11) தமிழகத்தில் 5 மையங்களில் மாண வர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தொடர் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தேசிய தேர்வு முகமையை (NTA) கலைக்க வேண்டும் என வலியு றுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, திருப்பூர், கடலூர் ஆகிய 5 மையங்க ளில் இந்த உண்ணாநிலைப் போராட் டம் நடைபெற்றது.

தௌ.சம்சீர் அகமது

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது கலந்து கொண்டார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தை கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீ. சந்துரு, மாணவர் சங்கத்தின் மாநில முன்னாள் செய லாளர் ஜி. செல்வா, சிஐடியு மாநி லச் செயலாளர் கே.சி. கோபிகுமார், கல்வியாளர் சிவக்குமார், மாண வர் சங்க மாவட்ட நிர்வாகிகள் அமர் நீதி, ஸ்வேதா (தென்சென்னை), ரவிச்சந்திரன், கு. தமிழ் (மத்திய சென்னை), அகல்யா, மோகன் (வடசென்னை) உள்ளிட்ட பலர் பேசினர்.

சி.மிருதுளா

மதுரையில் நடைபெற்ற போரா ட்டத்தில், இந்திய மாண வர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.மிருதுளா, திருப்பூரில் மத்தியக் குழு உறுப்பினர் எஸ். ஆனந்த குமார், கடலூரில் மத்தியக்குழு உறுப்பினர் சௌமியா, திருச்சியில் மாநில இணைச்செயலாளர் ஹரிஷ், துணைத் தலைவர் சுகதேவ் ஆகி யோர் உண்ணாநிலைப் போராட்டத் தில் கலந்து கொண்டனர்.