எஸ்எப்ஐ - டிஒய்எப்ஐ தலைமையில் திரண்ட இளைஞர்கள்! ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் ஆவேசப் போராட்டம்! 1000 பேர் கைது
2 Oct 2026, 9:58 pm

எஸ்எப்ஐ - டிஒய்எப்ஐ தலைமையில் திரண்ட இளைஞர்கள்! ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் ஆவேசப் போராட்டம்! 1000 பேர் கைது

புதுதில்லி, அக். 2 –தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி, மூத்தத் தலைவர் பிருந்தா காரத்மற்றும் எஸ்எப்ஐ, டிஒய்எப்ஐ அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறையானது, அடக்குமுறையைப் பயன்படுத்தி அராஜகமாக கைது செய்தது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) செயல்முறை மூலம்கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், ஜந்தர் மந்தரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜகஅரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டமிட்ட சதிச்செயலைக் கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது தில்லிகாவல்துறை மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து கைது செய்தது.

தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கைது!

இந்தத் தடியடி மற்றும் அடக்குமுறையின் போது, இந்திய மாணவர்சங்கத்தின் (SFI) அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி, பொதுச்செய லாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, ஐஷி கோஷ், எஸ். ஷில்பா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) தலைவர்கள் ஹிமாக்னராஜ் பட்டாச்சார்யா, ஏ.ஏ. ரஹீம், சஞ்சீவ் குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.எஸ்எப்ஐ மத்திய செயற்குழு எச்சரிக்கை!

இந்த கைது நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “நாட்டின் ஜனநாயக உரிமைகளும் வாக்குரிமையும் கேள்விக்குள்ளாக்கப்படும் போது,

மாணவர்கள் மவுனமாக இருக்க மாட்டார்கள். ஜனநாயக முறையிலான போராட்டங்களை அடக்க நினைக்கும் எதேச்சதிகாரப் போக்கை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ் குமார் தனது பதவியிலிருந்து விலகும் வரை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் வீரியமுடன் தொடரும் எனஎஸ்எப்ஐ தலைவர்கள் ஆதர்ஷ்எம். சாஜி மற்றும் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.- விரிவான