எஸ்ஐஆர் நடைமுறையை உடனடியாக நிறுத்திடுக மாணவர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
29 Sept 2026, 11:15 pm

எஸ்ஐஆர் நடைமுறையை உடனடியாக நிறுத்திடுக

மாணவர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.29-எஸ்ஐஆர் நடைமுறையை உடனடியாக நிறுத்தக் கோரி மாணவர், வாலிபர் சங்கத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய அரசின் கைபாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம்) நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் திருத்தம் செய்யப்பட்டவர்களின் பட்டியலை முறையாக சரிபார்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று மாலை இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கு.பாவெல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்ஃபிகர், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.