முந்தய பக்கம்

நீட் தேர்வு ரத்து கோரி மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

22 May 2026, 9:57 pm
நீட் தேர்வு ரத்து கோரி மாணவர் சங்கம்,  வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>நீட் தேர்வு ரத்து கோரி மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​அரியலூர், மே 22- நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எப்.ஐ மாவட்டச் செயலாளர் சரோஜினி தலைமை வகித்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். ரசிகா, எம். கார்த்திகேயன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஆகாஷ் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram