தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

21 Jul 2026, 10:50 pm
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

நாமக்கல், ஜூலை 21- அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தி னர் திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தமிழ்நாடு முழு வதும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அரசு சட்டக் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசு அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்கி வரு கிறது. ஆனால் அரசு சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய கல்லூரிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதில்லை. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். 2013 ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக் கும் இலவச பஸ் பாஸ் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. எனவே மற்ற மாணவர்களுக்கு வழங்கு வது போல் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செய லாளர் தங்கராஜ், மாவட்டத் துணைத் தலை வர் யாழினி, மாவட்ட இணைச் செயலாளர் பச்சமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சூர்யா, சாமுவேல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.