தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் கயவர்கள் இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

3 Aug 2026, 9:51 pm
போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு  பாலியல்  அச்சுறுத்தல் விடுக்கும் கயவர்கள் இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் கயவர்கள்

இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

புதுதில்லி, ஆக. 3 -வினாத்தாள் கசிவு மோசடிக்கு எதிராக நாடு முழுவதும் போராடிவரும் மாணவியர் மற்றும் போராட்டக்காரர்களை இலக்காகக் கொண்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவதூறுகள், ஆபாசத்தாக்குதல்கள் மற்றும் வன்கொடுமை மிரட்டல்களுக்கு இந்திய மாணவர் சங்கம் தனது வன்மையானகண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றத்தவறிய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்கள் மீது, பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்ட மிரட்டல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டி யுள்ளது.

பெண்கள் மீதான ஆபாசத் தாக்குதல்களும் மிரட்டல்களும்

சமூக வலைதளங்களில் பெண் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் வகையிலும், அருவருப்பான வார்த்தைகளால் அவதூறு பரப்பும் வகையிலும் திட்டமிட்ட செயல்கள் நடந்து வருவதாக இந்திய மாணவர் சங்கஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் தில்லி மாநிலக் குழு உறுப்பினரும், ஜே.என்.யு மாணவர்பேரவைத் துணைத் தலைவருமான கோபிகா, மற்றும் 15 வயது சிறுமி ருச்சிகா சிங், சாரதா சிங், ருச்சிகா சவுதாலாஉள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவாளர்களால் கொலை மற்றும் வன்கொடுமை மிரட்டல்களுக்குஉள்ளாகியுள்ளனர். குறிப்பாக, ‘நிர்பயா’ வன்கொடுமைச் சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள், மாற்றுக்கருத்து தெரிவிக்கும் பெண்கள் மீது பாலியல் வன்முறையைஏவத் துடிக்கும் பாசிச மனநிலையை வெளிப்படுத்துவதாக இந்திய மாணவர் சங்கம் கண்டித்துள்ளது.

பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம்

பெண்கள் மீதான வன்கொடுமை மிரட்டல்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, “நாகரிகமான” பெண்கள் எவ்வாறுநடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் சமூக வலைதளத்தில் ரீல் வெளியிட்டு அறிவுரை வழங்கியிருப்பதும், அவர்களை “மன்னிப்பதாகக்” கூறியிருப்பதும்ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி போராடும் பெண்களுக்குப் பிரதமரின்மன்னிப்பு தேவையில்லை என்றும், வினாத்தாள் கசிவு மோசடிகளை இயல்பாக்கிவிட்டு, பெண்களுக்கு எதிரானவெறுப்புப் பிரச்சாரங்களை அனுமதித்துள்ளதற்காக நாட்டு மக்களிடம் அரசாங்கம்தான் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.மிரட்டல்கள் மற்றும் ஆபாசத் தாக்குதல்கள் மூலம் ஜனநாயகப் போராட்டங் களை ஒடுக்க நினைக்கும் பாலியல் வன்முறை வெறியாட்டங்களைஎக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும், போராடும் அனைத்துப் பெண்களுடனும் இந்திய மாணவர் சங்கம் உறுதுணையாக நிற்கும் என்றும் சங்கத்தின் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் பொதுச் செயலாளர் ஸ்ரீஜன்பட்டாச்சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.