மாணவர்களை அரசியல் கூட்டத்திற்கு நிர்பந்திப்பதா? சசூரி கல்வி நிறுவனத்தின் செயலுக்கு மாணவர் சங்கம் கண்டனம்!
4 Nov 2026, 9:04 pm

மாணவர்களை அரசியல் கூட்டத்திற்கு நிர்பந்திப்பதா? சசூரி கல்வி நிறுவனத்தின் செயலுக்கு மாணவர் சங்கம் கண்டனம்!

ஈரோடு, நவ. 4 –ஈரோடு மாவட்டம் பெருந்து றைக்கு அரசியல் தலைவர்கள் வருகையின் போது, சசூரி தனியார் கல்வி நிறுவனம் மாணவர் களைப் பிரச்சார நிகழ்ச்சிக்குக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் குறிப்பிட்ட ஆடை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு, 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மாணவர்கள் அழைத்துச் செல்லப் பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள னர். விருப்பமில்லாத மாணவர்களையும் வகுப்புப்பிரதிநிதிகள் மூலம் நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது.

உயர்கல்வித் துறை விசாரணை நடத்த கோரிக்கைமாணவர்கள் கல்வி கற்பதற்காகவே கல்லூரிக்கு வருகிறார்கள் என்றும், அவர்களின் அரசியல் விருப்பத்திலும் தனிநபர் சுதந்திரத்திலும் தலையிடக் கல்வி நிறுவனத் திற்கு உரிமை இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.எனவே, இச்சம்பவம் குறித்து உயர்கல்வித் துறை உடனடியாகச் சுதந்திரமான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டகல்வி நிறுவன நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களை இதுபோன்று அரசியல் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தாத வகையில் அரசு கடுமையானவழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என இந்தியமாணவர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.