தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

3 Nov 2026, 11:16 pm
இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

இந்திய மாணவர் சங்க (எஸ்எப்ஐ)ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னிச்சையாக முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் இதுவரை தெளிவாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,”இந்திய மாணவர்சங்கத்தின் (எஸ்எப்ஐ) ஆந்திரப் பிரதேசமாநிலக் குழுவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னிச்சையாக முடக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரல்களை நசுக்கும் கவலைக்குரிய போக்கை சுட்டிக்காட்டுகிறது. முடக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த டிஜிட்டல் தணிக்கை நடவடிக்கையானது, கல்வி உரிமைகள், மாணவர் போராட்டங்கள் மற்றும் வளாகப் பிரச்சனைகள் பற்றிய தகவல்களைப் பெற ஆந்திரப் பிரதேசம் முழுவதிலும்எஸ்எப்ஐ இன்ஸ்டாகிராம் தளத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் குரல்களை மௌனமாக்குகிறது. இந்த முடக்க நடவடிக்கை, இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைப்பாக ஒன்றிணையும் உரிமையின் மீதான நேரடித் தாக்குதலாகும்” எனஇந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.