தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செய்யூர் வேட்பாளர் சிந்தனை செல்வன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

2 Apr 2026, 3:50 pm
செய்யூர் வேட்பாளர் சிந்தனை செல்வன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு
<p><strong>செய்யூர் வேட்பாளர் சிந்தனை செல்வன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு</strong></p> <p>செய்யூர், ஏப்.2- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சடப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிந்தனை செல்வன் வேட்பாளராக போட்டியிடுகிறார். &nbsp;இந்நிலையில், செய்யூர் அடுத்த கடப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விசிக வேட்பாளர் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார இதில், திமுக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும், கூட்டத்தில் பேசிய விசிக வேட்பாளர், சிந்தனைச் செல்வன் செய்யூர் தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்து பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள். மேலும், கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சி யில், இடைக்கழிநாடு பேரூராட்சி தலை வர் சம்யுக்தா, விசிகவின் தொகுதி மேலிட பொறுப்பாளர்கள் சூ.க.விடுதலை செழியன், பாசறை செல்வராஜ், சிபிஎம் வட்ட செயலாளர் க.புருஷோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.வள்ளிக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.