கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
28 Feb 2026, 2:29 pm

ஹோலி பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை, பிப்.28- ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடு தல் எண்ணிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு, கோவை போத்தனூர் மற்றும் பீகார் மாநிலம் பரவுனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகச் சேலம் கோட்ட ரயில்வே நிர் வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, போத்தனூர் சந்திப்பிலிருந்து பரவுனி சந்திப்பிற்கு மார்ச் 2 மற்றும் 9 ஆகிய திங்கட்கிழமைக ளில் அதிகாலை 4.30 மணிக் குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06021), புதன்கிழமை மதியம் 2 மணிக்கு பரவு னியை சென்றடையும். மறு மார்க்கமாக, பரவுனியிலி ருந்து மார்ச் 5 மற்றும் 12 ஆகிய வியாழக்கிழமைக ளில் மதியம் 1.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06022), சனிக்கிழமை இரவு 11.30 மணிக்குப் போத் தனூரைச் வந்தடையும். இந்தச் சிறப்பு ரயில்கள் திருப் பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

வனப்பகுதியில் சாலையோரமிருந்த புதர்கள் அகற்றம்

உதகை, பிப்.28- மனித – விலங்கு மோதலை தடுக்கும் வகையில், வனப்பகுதி வழியாக செல்லும் சாலையோரம் உள்ள புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. முதுமலை புலிகள் காப்பக வனச்சரத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி வழியாக செல்லும் சாலையோரம் உள்ள புதர்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வாழைத்தோட்டம், ஆச்சக்கரை ஆகிய பகுதிகளில் தலா 3 கிமீ தூரம் சாலையோரத் தில் புதர் செடிகள் அகற்றப்பட்டன. மாயார் பகுதியில், மின்சார வாரியத்திற்கு சொந்த மான நிலங்களிலும் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற்று, வனத்துறை மூலம் புதர் கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. புதர்கள் அதிகமாக இருந்த காரணத் தால் ஏற்பட்ட மனித - விலங்கு மோதல் அபா யம், பாதுகாப்பு சிக்கல்களை குறைக்கும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. சாலையோர மற்றும் குடியிருப்பு பகுதிக ளில் இருந்த அடர்ந்த புதர்கள் அகற்றப்பட்ட தால், மனித - விலங்கு மோதல் ஏற்படும் அபா யம் குறையும் என வனத்துறையினர் தெரி வித்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7 ஆம் தேதி தீர்ப்பு

கோவை, பிப்.28- கோவை கல்லூரி மாணவி கும்பல் பாலி யல் வன்கொடுமை வழக்கு விசாரணை நிறை வடைந்த நிலையில், வரும் மார்ச் 7 ஆம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாண வியை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கி விட்டு தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார் சதீஷ், கார்த்திக், தவசி ஆகிய மூவரை துப்பாக்கி யால் சுட்டுப் பிடித்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி பாலி யல் வன்கொடுமை வழக்கை விரைந்து நடத்தி முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத் தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசா ரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இவ்வழக்கில் பாதிக்கப் பட்ட பெண் மற்றும் அவரது நண்பர் மற்றும் சுமார் 125 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. சாட்சிகளுடன் நடத்தப்பட்ட விசாரணை நிறை வடைந்த நிலையில், வழக்கில் கைது செய் யப்பட்ட சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டனர். தொடர்ந்து அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளி யன்று எதிர் தரப்பு வாதம் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்டும் என மகளா நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுந்தரராஜன் அறிவித்துள் ளார். மிக விரைவில் இம்மாதிரியான வழக்கு கள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படு வது வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் வர வேற்றுள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈரோடு, பிப். 28- அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7 பேரிடம் ரூ.21.30 லட்சம் மோசடி செய்த வழக்கில், இரண்டு பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (42) மற்றும் பவானியைச் சேர்ந்த சென்னியப் பன் (40) ஆகிய இருவரும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய ஜம்பை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் உட்பட 7 பேர், அவர்களிடம் மொத்தம் ரூ.21.30 லட்சத்தை வழங்கினர். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும், அவர்களுக்கு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், 2014-இல் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகாரளித்தனர். இது தொடர் பாக மோசடி, போலி முத்திரை தயாரித்தல் உள்ளிட்ட பிரிவு களில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (எண் 2) நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி ராஜ்குமார் வெள்ளியன்று இறுதித் தீர்ப்பளித்தார். குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், ராஜேஸ்வரன் மற்றும் சென் னியப்பனுக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி தற்கொலை

தருமபுரி, பிப்.28- குற்ற வழக்கு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள மணியக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ந.சகா தேவன் (58). இவர் வெண்ணாம்பட்டி சாலை, மங்கம்மா 2 ஆவது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தருமபுரி மாவட்ட காவல் துறையில் 2 ஆம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந் தார். இரு ஆண்டுகளுக்கு முன்பு, பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் கைதான இவர், ஒழுங்கு நடவடிக்கையின்கீழ் அப்போது பணிநீக்கம் செய்யப் பட்டார். இந்நிலையில், வெள்ளியன்று சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சென்று வருவதாகக்கூறி வீட்டிலிருந்து சென் றுள்ளார். அதன்பிறகு அவரிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தருமபுரி ரயில் நிலையம் அருகே தேக்கு மரத்தில், அவரது சடலம் தொங்கி யது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டபோது, அவரது சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் தன்னைப்பற்றிய விவரத்துடன், தீராத வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் எழுதப்பட்டி ருந்தது. இதையடுத்து அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக தருமபுரி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டது. இதுதொடர்பாக தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். உயிரிழந்த சகாதேவனுக்கு மகேஸ்வரி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் கண்டுபிடிப்புகளை தவறாக பயன்படுத்தக்கூடாது

திருப்பூர், பிப்.28- அறிவியல் கண்டுபிடிப்புகளை தவறாக பயன்படுத்தக் கூடாது இயற்கையோடு இணைந்து வாழும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பேராசிரியர் விஜயலட்சுமி கூறினார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சனிக்கிழமை அன்று, கல்லூரியி லுள்ள குமரன் அரங்கில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியலின் விஞ்ஞான வளர்ச்சி என்ற தலைப் பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மாணவர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ சாரதா பெண்கள் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியை விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அவர் கூறுகையில், அறிவியல் என்பது மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற் கான முக்கிய அடித்தளமாகும். மனிதன் இயற்கையை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலிருந்து அறிவியல் உருவா னது. காலப்போக்கில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, பரிசோ தனை ஆகியவற்றின் மூலம் அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாத்து அறிவியல் மூலம் இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும் என்று பேசினார். கல்லூரி உதவியாளர் சரண்யா, இளநிலை உதவியா ளர் ஐஸ்வர்யா வாழ்த்திப் பேசினர். ஏராளமான மாணவ மாண விகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

வங்கதேசத்தினர் மூவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை

திருப்பூர், பிப்.28 - திருப்பூரில் சட்டவிரோதமாக, முறையான ஆவ ணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு நீதிமன்றத்தில் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள் ளது. கடந்த 2025 பிப்ரவரி 17 அன்று திருப்பூர் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகம்பாளையம், பாறைக்காடு பகுதியில் வீரபாண்டி காவல் நிலைய போலீ சார் சோதனை செய்தனர். அங்கே எஸ்.எம்.முஸ்தப்பா அல் அமின் (35), ஜாஸ் கஞ்சகான் அலி (27), முகமது மொனிருள் இஸ்லாம் (35) ஆகிய மூன்று பேர் சட்டவிரோதமாக முறையான ஆவணங்களின்றி வங்கதேசத்தில் இருந்து, திருப்பூர் வந்து தங்கி வேலை செய்வதாக தெரியவந்தது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. நீதிமன்ற விசாரணை முடித்த நிலையில் வெள்ளியன்று திருப்பூர் மாவட்டம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன் றத்தில் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கி இருந்த வங்கதேசத்தினர் மூன்று பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அப ராதம் விதித்து உத்தரவிட்டார்.

பாலியல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர், பிப்.28– திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட வீரபாண்டி பெரு மாள் கோவில் பகுதியில் இளம் சிறாருக்கு சிவக்கு மார் (46) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று அவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா, வியாழனன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தார். இதில் சிவக் குமார் மீது குற்றம் நிரூ பிக்கப்பட்டு அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்ட னையும், ரூ.50 ஆயிரம் அப ராதமும் விதித்துத் தீர்ப்ப ளித்தார். இதில் அரசு வழக்க றிஞர் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

காங்கயம் காளை சிலை திறப்பு: திருப்பூர்

, பிப்.28- காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காங்கயம் காளை சிலை திறப்பு விழா சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகு திகளில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத் தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் உலகப் புகழ்பெற்ற காங்கயம் காளை சிலை மற்றும் பொதுப்ப ணித்துறையின் சார்பில் ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் காங்கே யம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் கட்டப்பட் டுள்ள காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவல கம் ஆகியவற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண் மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி, மேயர் ந.தி னேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குடிநீர் விநியோகம் தனியாருக்கா? சேலத்தில் விசிக போராட்டம்

சேலம், பிப்.28- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியார் நிறு வனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வலியு றுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் சேலம் மாநகராட்சி 60 கோட்டங்களில் வசிக்கும் 10 லட்சத்து 83 ஆயிரத்து 56 எண்ணிக்கை கொண்ட மக்களின் குடிநீர் விநி யோக உரிமையை பன்னாட்டு சூயஸ் பிரைவேட் லிமிடெட் நிறு வனத்திற்கு 4,315 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி அடிப்ப டையில் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு உரிமையை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தனியாருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி சனியன்று சேலம் கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் பிரபாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

போதை மருந்துகள் விற்பனை: 6 பேர் கைது

நாமக்கல், பிப்.28- குமாரபாளையத்தில் போதை ஊசி மருந்துகளை விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்து, 120 போதை மாத் திரைகளை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை மயானப்பகுதி யில் சில இளைஞர்கள் சந்தேகத்திற்கு இட மாக அடிக்கடி வந்து செல்வதாக குமார பாளையம் காவல்துறைக்கு வெள்ளியன்று தகவல் கிடைத்தது. இந்த அடிப்படையில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவ மணி தட்டான் குட்டை மயானத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, அங்கு இரண்டு இளைஞர்கள் மஞ்சள் நிற போதை மருந்துகளை தங்கள் உடம்பில் ஊசி மூலம் செலுத்தி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட தில் மேலும் பலர் இந்த சம்பவத்தில் ஈடுபட் டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த, ஸ்ரீ ஹரிஷ் (23), குமாரபாளையம் அபெக்ஸ் காலனியை சேர்ந்த திருநாவுக்கரசு (37), நாராயண நகரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (20), சடையம்பாளை யம் பகுதி சேர்ந்த வசந்த் (20), ஈரோடு, கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த கார்த்தி (20), ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த ஹக் கீம் (22) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து போதை மருந்துகளை தயாரிக்கும் 120 மாத்திரைகள் மற்றும் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர். பின் னர் அவர்களை கைது செய்து குமாரபாளை யம் குற்றவியல் நீதிமன்றத்தில், நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

தீ விபத்தில் 2500 கோழிகள் பலி

ஈரோடு, பிப்.28- பெருந்துறை அருகே கோழிப்பண்ணையில் ஏற் பட்ட தீ விபத்தில், 2,500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரி ழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந் துறையை அடுத்த, காஞ்சிக் கோவில், முள்ளம்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (70). இவர் செங்காளிபாளை யத்தை அடுத்த கோவில் தோட்டம் பகுதியில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். அங்கு 4 ஷெட்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு ஷெட்டில் வெள்ளியன்று திடீரென தீப்பற்றியது. இதைக்கண்ட அப்பகுதியினர் ரங்கசா மிக்கும், பெருந்துறை தீய ணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென்று அருகிலிருந்த, மற்றொரு ஷெட்டுக்கும் பரவியது. இத னிடையே, சம்பவ இடத் திற்கு வந்த பெருந்துறை தீய ணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இவ் விபத்தில் தீயில் கருகி 2 ஆயி ரத்து 500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. மின் கசிவால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப் படுகிறது.

பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

உதகை, பிப்.28- கோத்தகிரி அருகே சிறுமிக்கு பாலி யல் தொல்லை ஏற்படுத்திய முதியவ ருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியி லுள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தாயார் கருத்து வேறுபாடு காரணமாக கண வரை பிரிந்து விட்டதால், சிறுமியின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சிறுமி அதே பகுதியிலுள்ள தனது தாத்தா, பாட்டி வசிக்கும் வீட்டில் இருந்து பள் ளிக்கு சென்று வந்தார். அவரது தந்தை யும், சிறுமியின் தாத்தாவின் 60 வயது தம்பியும், சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். இந்நி லையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி வீட்டில் பாட்டியுடன் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தார். அப் போது ஜன்னல் வழியாக கையைவிட்டு கதவை திறந்து உள்ளே வந்த தாத்தா வின் தம்பி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப் போது சப்தம் கேட்டு எழுந்த பாட்டி, தன் னுடைய கணவரின் தம்பியை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அந்த முதி யவர் அங்கிருந்து ஓடிவிட்டார். விசார ணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து குன்னூர் அனைத்து மக ளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்ப திவு செய்து, முதியவரை கைது செய்த னர். உதகை மகிளா நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளி யன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சிறு மிக்கு பாலியல் தொல்லை தந்த முதிய வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரை செய்தார்.