பாலியல் வன்கொடுமை: கைதிகளின் படங்கள் வெளியீடு
3 Dec 2025, 2:59 pm
<p><strong>பாலியல் வன்கொடுமை:கைதிகளின் படங்கள் வெளியீடு</strong></p>
<p>கோவை, டிச.3- மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் ஆட்டு வியா பாரி கொலை ஆகிய வழக்கில்பிடிபட்ட மூவரின் படங்களை காவல் துறையினர் வெளியிட்டனர். கோவையில் நவ.2 ஆம் தேதி மாணவியை கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் கைதான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), காளீஸ்வரன் (28), குணா (25) ஆகிய மூவரையும் போலீசார் பொது மக்கள் அடையாளம் காணும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதேநாளில் அன்னூர் அருகே ஆட்டு வியாபாரி தேவ ராஜ் (50) என்பவரை கட்டையால் அடித்துக் கொலை செய்து சடலத்தை கோவில்பாளையம் எல்லைக்கு தூக்கி வீசியதும் இதே மூவர்தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு கொடூரச் சம்பவங்களையும் ஒரே நாளில் செய்த மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேவராஜ் கொலை வழக்கிலும் அவர்களை இணைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>
