தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

23 Nov 2025, 6:20 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை, நவ.23– 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதி யைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2022 செப்டம் பர் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது மது அருந்தி விட்டு வந்த சிறுமியின் தந்தை பாலியல் வன்கொடுமை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்நிலை யில், சனியன்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  பகவதி அம்மாள் முன்னிலையில் நடைபெற்ற விசாரணை யில், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம்  ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.40 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

தருமபுரி, நவ.23- தருமபுரி மாவட்டத்தில் 1,500 மாணவர்களுக்கு ரூ.40  கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வேங்க னார் வஜ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வா கம் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து நடத்திய தொழில்  வழிகாட்டுதல் மற்றும் கல்விக் கடன் வழங்குதல் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதில்  ஆட்சியர் ரெ.சதீஸ் பேசுகையில், தமிழ்நாடு அரசு மாணவர்க ளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்ப டுத்தி வருகிறது. கல்விக்கடன் என்பது மாணவர்கள் தாங்கள்  விரும்பிய துறையில் கல்வி பெற்று முன்னேற்றம் அடைவ தற்கும், அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரம் வளர்ச்சி  அடைவதற்காகவும் அவசியமாவதால் அரசு கல்விக்கடன் வழங்க முன்னுரிமை அளித்து வருகிறது. தருமபுரி மாவட்டத் தில் 1,500 மாணவர்களுக்கு ரூ.40 கோடி கடனுதவி வழங்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ஜோதிசந்திரா, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியாா் பள்ளி கள்) ஜெயகாந்தம், கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி விலங்கி யல் இணைப் பேராசிரியர் விஜில் அன்பையா, மூத்த தொழில்  வழிகாட்டுதல் ஆலோசகர் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

உடுமலை, நவ.23- கிராமப்புற மக்கள் அதிகம் வசிக்கும் உடுமலைப் பகுதி யில் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற தொகு தியில் ஒரு சிறிய மைதானம் கட்டப்படும் என்று அறிவித் தது. அதன்படி உடுமலை, மடத்துக்குளம் என்ற இரண்டு சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது உடுமலையை  மையப்படுத்தியாவது உடனடியாக விளையாட்டு மைதானம்  அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கிராமங்கள்  நிறைந்த உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் இளைஞர்கள்  உடற்பயிற்சி மற்றும் விளையாட செல்ல வேண்டும் என்றால்  தனியார் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. விவசாய தொழிலை மட்டுமே அதிகம் நம்பி இருக் கும் இம்மக்கள் தனியாக பணம் கொடுத்து விளையாட்டு பயிற்சிக்கு செல்ல முடியாது. எனவே தமிழக அரசு சிறிய அள விலான விளையாட்டு மைதானம் கட்டி அதில் கபடி, கால்பந்து  உள்ளிட்ட அனைத்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி  கூடங்களை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அவிநாசி வீட்டு வசதி சங்கத்திற்கு விருது

அவிநாசி, நவ.23- தமிழக அளவில் சிறந்த கூட்டுறவுச் சங்கமாக அவிநாசி  வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தேர்வு செய்யப்பட்டுள் ளது. 72 ஆவது அகில இந்தியக் கூட்டுறவு வார விழாவின் மாநில  அளவிலான விழா திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் கடந்த நவ.20 ஆம் தேதியன்று நடைபெற்றது.  இவ்விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கான கேடயத்தை,  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் கூட்டுறவு சங்கங்க ளின் பதிவாளர் நந்தகுமார் ஆகியோரிடமிருந்து, அவிநாசி  வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் செயலாட்சியர் ரதி ஐஸ் வரியா, செயலாளர் பழனிச்சாமி மற்றும் சங்கப் பணியா ளர் டி.செல்வராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மாணவி தற்கொலை: 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

கோவை, நவ.23- வால்பாறை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக 3  ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டனர். கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த முத்து சஞ்சனா, அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து  வந்தார். மூன்று ஆசிரியர்களின் மன மற் றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, கடந்த அக். 10 ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தீக்குளித்து தற் கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து, தீக்காயங்களுடன் கோவை  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, கடந்த நவ.19 ஆம் தேதியன்று உயிரிழந் தார். இதைத்தொடர்ந்து, மாணவியின்  குடும்பத்தினர் அவர் உயிரிழப்பதற்கு முன்பே பதிவு செய்த வீடியோ வாக்கு மூலத்தை வெளியிட்டனர். அதில், ஆங் கில ஆசிரியை தனது தோற்றத்தை தொடர்ந்து கேலி செய்ததாகவும், நல்ல கல்வித்திறன் இருந்தபோதிலும், தன் னை மெதுவாகக் கற்கும் மாணவர்களு டன் சேர்த்ததாகவும் மாணவி குற்றஞ் சாட்டியிருந்தார். மேலும், தமிழ் மற்றும்  அறிவியல் ஆசிரியர்களின் துன்புறுத்த லும் தனது இந்த விபரீத முடிவுக்கு  காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந் தார். இந்த வீடியோ வெளியானதைய டுத்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்  ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி னர். அதனடிப்படையில், அவர்கள் அரு கிலுள்ள பள்ளிகளுக்குப் பணியிட மாற் றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசி ரியர்கள் கொடுக்கும் விளக்கங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

கடும் பனிமூட்டம்: படகு சேவை நிறுத்தம்

சேலம், நவ.23- ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்தால், படகு சேவை தற்காலி கமாக நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களா கவே காலை முதலே கடும் பனிமூட்டதுடன், சாரல் மழை  பெய்து வருவதால், கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலை யில், வார விடுமுறையான ஞாயிறன்று ஏற்காட்டிற்கு அதிள வில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஆனால், அதிகாலை முதல் பனிமூட்டத்தால், 5 அடி தொலைவில் உள்ளது கூட தெரி யாத நிலை ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியா பாரிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, படகு இல் லத்தில் ஏரி முழுவதும் தெரியாத சூழல் ஏற்பட்டு, படகுகளை  இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் படகு சேவை தற் காலிகமாக நிறுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்பினர். இருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகள்  உற்சாகமாக சாரல் மழையில் நனைந்தும் கடும் மூட்டத் தை ரசித்தனர்.

கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

அவிநாசி, நவ.23- அவிநாசிலிங்கம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடு பட்ட வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடை பெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் அவிநாசி மதுவிலக்கு காவல் துறையினர், அவி நாசிலிங்கம்பாளையத்தில் ஒரு பேக்கரி அருகே தீவிர சோத னையில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக  எடுத்து வந்த வடமாநில இளைஞரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர்  கணியம்பூண்டியில் தங்கி டெய்லர் வேலை செய்து வரும்,  பீகாரைச் சேர்ந்த சுபத்குமார் யாதவ் (31) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ கஞ்சாவைப் பறி முதல் செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.