தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

9 Dec 2025, 4:25 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆயுள் தண்டனை

உதகை, டிச.9- 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவ ருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவரின் மூத்த மகள் கல்லூரியிலும், 15 வயது இளைய மகள் அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும்  படித்து வந்தனர். விவசாயியின் நண்பரான அதேபகுதியை சேர்ந்த உஸ்மான் (55), என்பவர் அடிக்கடி பல்வேறு கார ணங்களுக்காக விவசாயி-யின் வீட்டுக்கு சென்று வந்துள் ளார். ஒரு கட்டத்தில் அவரது வீட்டிற்கு சென்ற உஸ்மான்,  வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, தனியாக இருந்த  15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதுகுறித்து யாரிடாமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளார். இச்சம்பவத்தை பயன்படுத்தி பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். அந்த சமயங்களில் வலுக்கட்டாய மாக கருத்தடை மாத்திரைகளையும் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், தேவர்சோலை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத் தில் வழக்குப்பதிவு செய்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்.17  ஆம் தேதி உஸ்மானை கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  உஸ்மானுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம்  விதித்து நீதிபதி எம்.செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில், ரூ.2 லட்சம்  இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நீலகிரி ஆட்சியருக்கு  அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து உஸ்மான் கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரியில் 52 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்?

உதகை, டிச.9- நீலகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம், மூன்று சட்டமன்ற தொகுதியில், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த நவ.4 ஆம் தேதி முதல் இதற்கான கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டன. வாக்காளர்கள் அவற்றை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். இப்பணிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், வியாழனன்று (நாளை) முடிவடைகிறது. டிசம்பர் முதல் வாரம் கணக்கெடுப்பின்படி, நீலகிரியில் மூன்று தொகுதிகளில் இறந்தவர்கள், 12 ஆயிரம் பேர், நிரந்தரமாக இடம் மாறி சென்றவர்கள், 40 ஆயிரம் பேர், கண்டுபிடிக்க முடியாதவர்கள், 750 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர். நீலகிரியில் மூன்று தொகுதிகளில் 2,79,201 ஆண்கள், 3,05,041 பெண்கள், 18 மாற்றுப் பாலினத்தவர் என மொத்தம் 5,84,260 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நிறைவடையும் தருவாயில், மேற்கண்ட வாக்காளர்களில் 52 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

மருத்துவ முகாம்

நாமக்கல், டிச.9- பள்ளிபாளையம் நக ராட்சி தொடக்கபள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச  மருத்துவ முகாம் நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம், பள் ளிக்கல்வித்துறை ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி வட் டார வள மையம் சார்பாக, பள்ளிபாளையம் நகராட்சி தொடக்கபள்ளியில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்க ளுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. இம்முகாமை பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ் துவக்கி வைத்தார். இதில்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவ லர் அருள்தாஸ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக  துணைத் தலைவர் முருகன்,  வட்டார கல்வி அலுவலர் கள் சுரேஷ் குமார் மற்றும் அருள், குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் கோமதி, ஆசிரியர் பயிற்று னர் கணேஷ் குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் கண், காது, மூக்கு,  மனநலம், பொது மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு பரி சோதனைகள் செய்யப் பட்டது. முகாமில் ஏராளமா னோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

நீலகிரியில் 52 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்?

உதகை, டிச.9- நீலகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம், மூன்று சட்டமன்ற தொகுதியில், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த நவ.4 ஆம் தேதி முதல் இதற்கான கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டன. வாக்காளர்கள் அவற்றை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். இப்பணிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், வியாழனன்று (நாளை) முடிவடைகிறது. டிசம்பர் முதல் வாரம் கணக்கெடுப்பின்படி, நீலகிரியில் மூன்று தொகுதிகளில் இறந்தவர்கள், 12 ஆயிரம் பேர், நிரந்தரமாக இடம் மாறி சென்றவர்கள், 40 ஆயிரம் பேர், கண்டுபிடிக்க முடியாதவர்கள், 750 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர். நீலகிரியில் மூன்று தொகுதிகளில் 2,79,201 ஆண்கள், 3,05,041 பெண்கள், 18 மாற்றுப் பாலினத்தவர் என மொத்தம் 5,84,260 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நிறைவடையும் தருவாயில், மேற்கண்ட வாக்காளர்களில் 52 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.