தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நந்தனம் கல்லூரி கேண்டினில் பணியாற்றிய பெண் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

29 Jan 2026, 5:39 pm
நந்தனம் கல்லூரி கேண்டினில் பணியாற்றிய பெண் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது
<p><strong>நந்தனம் கல்லூரி கேண்டினில் பணியாற்றிய பெண் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது</strong></p> <p>சென்னை, ஜன. 29 - நந்தனம் கலைக்கல்லூரி கேண்டினில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 3 பேர் கைது &nbsp;செய்யப்பட்டனர். சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் 12 வருடங்களாக கேண்டின் நடத்தி வருப வர் முத்துச்செல்வம். இவர் அரியலூர் மாவ ட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை அண்மையில் பணிக்கு அமர்த்தியுள்ளார். இதன்பின்னர் முத்துச்செல்வம், கேண்டின் ஊழியர்கள் குணசேகரன், கார்த்திகேயன் ஆகியோர் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சமூக நல அலுவலகத்திற்கு ஜன.28ந் தேதி புகார் கிடைத்துள்ளது. அதன்பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் வன் கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரித்த காவல்துறையினர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து அவர் களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறை யில் அடைத்தனர். மாணவர்கள் போராட்டம் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரி வித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர் நீதி, &ldquo;கல்லூரிக்குள் நடந்த சம்பவம் மறைக் கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர் பாக கல்லூரி முதல்வர் அல்லது பாலியல் புகார் குழு புகார் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. சிபிடி கல்லூரி வளாகம், நந்தனம் கல்லூரி என சென்னையில் உள்ள கல்வி வளா கங்கள் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. அண்ணா பல்கலைக் கழக சம்பவத்திற்கு பிறகும் கல்வி வளாகங்களில் வெவ்வேறு வடிவங்களில் பாலியல் வன்கொடுமை நிகழ்கிறது. அரசு கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, பாலியல் வழக்கில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.&rdquo; என்றார். பேச்சுவார்த்தை இதனையடுத்து கல்லூரி முதல்வர், மாணவர் சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, ஐசிசி குழுவில் 3 மாணவிகள், 3 மாணவர்கள் கூடுத லாக இடம்பெறுவார்கள். வழக்கு விசார ணைக்கு கல்லூரி நிர்வாகம் முழு ஒத்து ழைப்பு வழங்கும் என்று உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.