மகிளா நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு
15 Dec 2025, 2:48 pm
<p><strong>மகிளா நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு </strong></p>
<p>கோவை, டிச.15- மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழங்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரி வித்துள்ளார். கோவை மாநகர காவல் துறையில் உள்ள ரோந்து வாக னங்களில் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் ஜி.பி.எஸ் வசதியுட னான கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த காவல் கட் டுப்பாட்டு அறையுடன் இணைக்க கூடிய வகையில் கேமரா பொறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் திங்களன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகரில் 40 ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ரோந்து வாகனங்கள் எங்கு உள்ளது என்பது கண்காணிக்க முடியும், ஆடியோ பதிவு வசதியுடன் உள்ளது. மேலும் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு ரோந்து வாகனம் செல்லும் போது அங்கு நடக்கும் அனைத்து முழுமையாக பதிவு செய் யப்படுகிறது. மேலும் ரோந்து வாகனங்களில் பொறுத்தப் பட்டுள்ள கேமரா காட்சிகள் முழுமையாக கட்டுப்பாட்டு அறை யில் இருந்து கண்காணிக்க உள்ளோம். இது பொதுமக்க ளுக்கு ஒரு கூடுதல் பாதுக்காப்பை ஏற்படுத்தும். புத்தாண்டை முன்னிட்டு கோவை மாநகரில் எப்போது உள்ள அதே கட்டுப்பாடுகள் தொடரும், கூடுதல் பாதுக்காப்பு முன்னேற்பாடுகளை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மேம்பாலங்களில் செல்லும் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத் திற்கு மேல் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப டும். அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து செல்ல ஏதுவாக நள்ளிரவு 12.30 வரை அனுமதியுள்ளது. தனியார் விடுதிகளுக்கு பாதுகாப்பு களை உறுதிபடுத்த வேண்டும். கோவை மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, வெகு விரைவில் விசாரணை ஆரம்பிக்க உள்ளது. கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள், பாதுகாப்பு கருதி நடத்தப்பட்டது. கும்பல் பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.</p>
