சிபிஎம் முயற்சியால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது
3 Dec 2025, 2:59 pm
<p><strong>சிபிஎம் முயற்சியால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது</strong></p>
<p>அரியலூர், நவ.3 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி சிலால் கிராமத்தில் பல ஆண்டுகளாக தெருவின் இருபுறமும் உள்ள கழிவு நீர் வாய்க்கல்கள் அடைபட்டு கிடந்தன. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் “சாக்கடை வாய்க்கால்களை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தட்டி வைப்பது” என முடிவு செய்யப்பட்டது. மேலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், பஞ்சாயத்து எழுத்தர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் துணையோடு அனைத்து கழிவு நீர் வாய்க்கால்களையும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மற்றும் ஒன்றியக் குழு எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தா.பழூர் ஒன்றியம் முழுவதும் உள்ள வரத்து வாய்க்கால்களை புனரமைக்க, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தா.பழூர் ஒன்றியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. தூர்வாரும் பணியின்போது, கட்சியின் சிலால் கிளைச் செயலாளர் அழகேசன், கட்சி உறுப்பினர் ரஞ்சித் மற்றும் கிளை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.</p>
