கழிவுநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி
30 Nov 2025, 4:29 pm
<p><strong>கழிவுநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி</strong></p>
<p>திருவள்ளூர், நவ.30- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை யில் இயங்கும் தொழிற் சாலைகள், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்களைப் பயன்படுத்தாமல், சில லாரிகள் மூலம் சட்டவிரோத மாகக் கழிவுகளைத் திறந்து வெளியில் விடுகின்றன. கடந்த 10 நாட்களாகக் கழிவுநீர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்து வருவதால், தொழிற்சாலைக் கழிவுநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் தற்போது பெய்து வரும் மழையைப் பயன் படுத்தி, மழை நீருடன் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகளை நிர்வாகத்தினர் வெளியேற்றி வருகின்றனர். மழை நீருடன் கலந்த இந்த இரசாயனக் கழிவுநீர், சிப்காட் பகுதியை ஒட்டிய சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிக் கடல்போல் காட்சி யளிக்கிறது. துர்நாற்றத்து டன் கூடிய இந்தக் கழிவு நீரில் இருசக்கர வாகனங் கள் முதல் கனரக வாகனங் கள் வரை தத்தளித்துச் செல் கின்றன. சில வாகனங்கள் கழிவுநீரிலேயே பழுத டைந்துவிடுகின்றன. இந்த அலட்சியப் போக்கால், தமிழகத்திற்கும் வடமாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்துத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்களை நிர்வாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்களைப் பயன்படுத்தாத தொழிற் சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்ட பிறகும், உத்த ரவை அவமதித்து இயங்கி வரும் தொழிற்சாலைகள் மீது ஆட்சியர் அதிரடி நட வடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற அவல நிலையைத் தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.</p>
<p> </p>
