இடையக்கோட்டையில் தெருவில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் அவதி
2 Jan 2026, 3:33 pm
<p><strong>இடையக்கோட்டையில் தெருவில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் அவதி</strong></p>
<p>ஒட்டன்சத்திரம், ஜன.2- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை யில் முஸ்லிம் தெருவில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் சுகாதாரச்சீர் கேடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை யில் முஸ்லிம் தெற்கு தெரு வில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடப் பணிக்கு பயன் படுத்தப்பட்டு சிதறிய கழிவு சிமெண்ட் துகள் கள் கழிவுநீர் வாய்க்கா லில் விழுந்து அடைத்துள் ளது. இதை ஊராட்சி நிர்வா கம் அகற்றி கழிவுநீர் வாய்க் காலை தூர்வாரவில்லை. இதனால் கடந்த சில நாட்க ளாக சாலையில் தொடர்ந்து கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்தத் தெருவின் வழி யாக ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப்பள்ளி மற்றும் நேருஜி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கழுவுநீர் மீது நடந்து செல்வ தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இடையக் கோட்டையில் முஸ்லிம் தெருவில் வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் தடை யின்றி செல்வதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.</p>
