குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு: ஆட்சியரிடம் மனு
2 Feb 2026, 4:51 pm
<p><strong>குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு: ஆட்சியரிடம் மனு</strong></p>
<p>சேலம், பிப்.2- பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாயில், சாக் கடை கழிவு கலந்து வருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகா ரளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரம், 50 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயில், சாக்கடை கழிவு சேர்ந்து வருவதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என பலருக் கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றித்தர வேண்டும் என மாநகராட்சி அதி காரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும், இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பிரச்சனைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீட்டு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி விசிக மாநகர மாவட்டச் செயலா ளர் காயத்ரி தலைமையில், பொதுமக்கள் திங்களன்று ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.</p>
