முந்தய பக்கம்

சாலையில் தேங்கும் கழிவுநீர்! திருவண்ணாமலையில் பொதுமக்கள் சாலை மறியல்

26 Mar 2026, 2:46 pm
சாலையில் தேங்கும் கழிவுநீர்! திருவண்ணாமலையில் பொதுமக்கள் சாலை மறியல்
<p><strong>சாலையில் தேங்கும் கழிவுநீர்! திருவண்ணாமலையில் பொதுமக்கள் சாலை மறியல்</strong></p> <p>திருவண்ணாமலை, மார்ச் 26- கால்வாயிலிருந்து வெளியேறி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக் கோரி, திருவண்ணாமலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாநகராட்சி 19-வது வார்டு கீழ்நாத்தூர் பகுதி தவசியார் குளத் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். வேட்டவலம் சாலையிலிருந்து வரும் கழிவுநீர் இப்பகுதிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதால், குடியிருப்புப் பகுதியைச் சுற்றி குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு மற்றும் விஷக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள னர். ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram