தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செவ்வந்தி - ஆம்பல் காமராஜ்

11 Jul 2026, 10:50 pm
செவ்வந்தி -  ஆம்பல் காமராஜ்

செவ்வந்தி - ஆம்பல் காமராஜ்

ஒரு தெருவின் முடிவில் அவள் வீடும், ஒரு தெருவின் துவக்கத்தில் இவன் வீடும் உள்ளது. அப்போ செல்வா, செவ்வந்தி இருவரின் வீடுகளும் பக்கத்துப் பக்கத்து வீடுகள்.

இருவரும் ஆரம்பப் பள்ளிக் காலம் முதலே இணைபிரியாத சினேகிதர்கள். மின்சாரக் கம்பத்தின் கீழ் செவ்வந்தியும் செல்வாவும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ முறை பென்சிலும், ரப்பரும் எழுதுவதற்காகச் செவ்வந்தியிடம் செல்வா வாங்கியிருக்கிறான். மீண்டும் அவளிடம் ஒரு முறையேனும் அவன் திருப்பிக் கொடுத்ததே இல்லை.

அவளின் அம்மா “என்னாடீ... ரெண்டு நாளைக்கு ஒரு பென்சில் ரப்பரா...” என்று கேட்கும்போது எதுவும் பதில் சொல்லாமல் தலைகுனிந்து மெளனமாக நின்று பலமுறை அடி வாங்கியிருக்கிறாள். செல்வா பள்ளிக்கூடத்திற்கு போகாத நாளில் முறையாக விடுப்பு கடிதம் கொடுக்காததற்கான அபராதத் தொகை ஐம்பது பைசாவை செவ்வந்தியே கட்டி விடுவாள்.

வீட்டிற்கு வந்ததும் செல்வாவிடம் வகுப்பில் எடுத்தப் பாடம் இதுதான் என்று ஆசிரியர்களை விட தெளிவாகச் சொல்லிக் கொடுப்பாள்.

இருவரும் கல்லூரி வரைக்கும் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து படித்து வந்தார்கள். செவ்வந்தியின் அம்மா ஆசிரியர், அப்பா மருத்துவர்.

செல்வாவின் பெற்றோர்கள் விவசாயிகள். பள்ளியில் நடைபெறும் கலை இலக்கிய போட்டிகளில் செல்வா முதலாமிடம் இரண்டாமிடம் என்று பல பரிசுகளை வாங்கி விடுவான். செல்வா பரிசுகள் வாங்க வாங்கச் செவ்வந்தியின் மனம் மகிழ்ந்துகொண்டே இருக்கும்.

செவ்வந்தியின் அண்ணன் ஆரியன் எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டாலும் ஒருசில போட்டிகளில் மட்டும்தான் பரிசு பெறுவான்.

அவனுக்குள் எப்போதும் ஒரு சினம் இருந்துகொண்டேயிருக்கும். நட்பும் கல்வியும்தான் இவர்களை தொடர்ந்து நண்பர்களாக பயணிக்கச் செய்தது. எப்படியும் வேலைக்குப் போய்விட வேண்டுமென்ற எண்ணத்தோடு படித்த செல்வா, ஒரு ஐ டி கம்பெனியில் வேலையில் சேர்ந்துவிட்டான். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம்.

செவ்வந்தியும் செல்வா வேலை செய்த அதே கம்பெனிக்குச் செவ்வந்தியும் அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தோடு வேலையில் சேர்ந்து விட்டாள்.

இதைச் சற்றும் எதிர் பார்க்காத செல்வா சந்திக்காமல் இருந்த சில நாள்களின் நட்பு மீண்டும் துளிர்த்தபோது ஒரு தனிப்பட்ட மரியாதைக்குரியதாக மாறிப்போனது. நட்புதான் மிகப்பெரியது, இவைகளுக்கு அப்பால் வேறதுவும் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை. உறவுகளைக் கடந்த உச்சம் ஒன்று அவர்களைத் தொட்டுக்கொண்டது.

கடந்த மாதம் செல்வா ஊருக்கு தனியாக வந்துவிட்டுப் போனான். அதற்குப் பிறகு நேற்று இரவு இருவரும் சேர்ந்து ஊருக்கு வந்தார்கள்.

செவ்வந்தியின் பெற்றோர்கள் செல்வா வீட்டிற்குப் போனார்கள். வயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்த செல்வாவின் அம்மாவும் அப்பாவும் காலைக் கூடக் கழுவாமல் சேற்றோடு அப்பொழுதுதான் வாசல்படியில் அமர்ந்தார்கள்

. “எங்கே செல்வா...?” என்று கேட்டார்கள். “நேற்றிரவு ஊரிலிருந்து வந்ததுமே நாளைக்கு மாமா வீட்டுக்குப் போகணும் என்றான்.

காலையிலேயே எழுந்து போய்விட்டானே...” என்று அவர்களிடம் சொன்னதும், “ஏன்...?” என்று செல்வாவின் அப்பா கேட்டார்.

எந்தப் பதிலும் சொல்லாமல் இறுக்கமான முகத்துடன் செவ்வந்தியின் பெற்றோர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். “

எங்கப்பா போனீங்க...!” என்று கேட்டுக்கொண்டே சிரித்த முகத்தோடு செவ்வந்தி வாசலுக்கு ஓடி வந்தாள். மெளனம் கலையாத பெற்றோர்கள் வீட்டிற்குள் சென்றார்கள். நடு இரவு கால் தட்டுப்பட்டது, “டேய்...! ஆரியன்...!” “ஒண்ணுக்குப்பா...” “சரி...” தூக்கக் கலக்கத்தில் கேட்ட அப்பா அசந்து விட்டார். சத்தம் கேட்டு செவ்வந்தி எழுந்து இருக்கையில் அமர்ந்தாள். வெளி வாயிற்கதவிலிருந்து வெளியாகி சாலையை நோக்கிச் சென்றான் ஆரியன்.

அதிகாலையிலேயே எழுந்த செவ்வந்தி வாசல்படியில் வந்தமர்ந்தாள். பறவைகளின் அங்கலாய்ப்பு இரைச்சலுக்கிடையில் பரபரப்பாக முனகிக்கொண்டுச் செல்வதைக் கண்டாள். செல்வா வீட்டிற்குப் போனாள், அங்கு யாருமே இல்லை. திரும்பி வீட்டிற்கு வந்தவள் வெளிக் கழிவறை மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதற்கான சுவிட்ச் பட்டனை அணைத்தாள்.

கை விரல்களில் எதோ ஒரு ஈரம் பிசுபிசுத்தது. தலை கனமாக இருப்பது போல் உணர்ந்தாள். ஆரியன் அறைக்குப் போய் கதவைத் திறந்தாள்.

குப்பென்று குருதி வீச்சம் முகத்தில் அறைந்து அவளை வெளியில் தள்ளியது. “என்னாக் கொன்றுவேன் உன்னையும்...” என்று ஆகப்பெரிய குரலெடுத்துக் கத்தியவன், அறைக் கதவை இழுத்து அடித்துச் சத்தமாகச் சாத்திக்கொண்டான்.

அப்படியே சுவரைப் பிடித்துக்கொண்டு தரையோடு தரையாகச் சரிந்து அமர்ந்தாள். அப்போதுதான் புரிந்துகொண்டாள் ஒரு ஆகப்பெரிய நட்பை ஆணவ அங்குசக் கூர்வாள் கொண்டு குத்திக் கிழித்திருக்கிறார்கள் என்று.

அன்பால் விளைந்த பாசத்திற்கு அளவுகோலே இல்லையென்று இங்கு யாருக்குமேத் தெரியவில்லை. பொருளாதாரத்திற்கு ஏற்றார் போல் கொடுமையின் கூர் வாள் கூராகிறது.

சாதிய அடுக்ககங்கள் மேலெழும்பிக்கொண்டே இருக்கிறது. உரத்த எச்சரிக்கை ஒலியோடு மூன்று காவல்துறை வாகனம் விரைந்து வந்தது. செவ்வந்தியின் அண்ணன் ஆரியனை கைவிலங்கு மாட்டி அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

‘தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ என்று பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் தலைமை ஆசிரியரான செவ்வந்தியின் அம்மா பசப்பியம்மாளும், எல்லா உயிர்களும் நலமோடு வாழ வேண்டுமென்று இரவு பகல் பாராமல் தன்னலமற்றுப் பணியாற்றிய தலைமை மருத்துவரான ஆரோக்கியமுத்துவும் தலை குனிந்தபடி மகனோடு அரசு காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள்.

வாகனம் சிறிது தூரத்திலுள்ள வெக்காளியம்மன் ஏரிக்கரைக்குப் போனது. கண்டம் துண்டமாக வெட்டி தனித்தனியாக வீசப்பட்ட உடல் உறுப்புகளை மருத்துவ உதவியாளர்கள் வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்

டி எடுத்துக்கொண்டு வந்து வாகனத்தில் ஏறினார்கள். மறுநாள் இரவு பத்து மணிக்கு பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தார்கள். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு செவ்வந்தியின் பிறந்தநாளுக்கு அன்பளிப்பு என்று முதன் முதலாக செல்வா எடுத்துக்கொடுத்த மஞ்சள் நிறத்தோடு, கிளிப்பச்சை வண்ணத்திலான பட்டுச்சேலையில் நடு வீட்டில் செவ்வந்தி தூக்கில் தொங்கினாள். “என் இறப்பிற்கு செல்வா காரணமில்லை, உண்மையான நட்பை புரிந்துகொள்ளாத இந்தச் சமூகம் தான்

. என் அண்ணன் ஆரியனை கைது செய்யுங்கள் என்று காவல்துறைக்குத் தகவல் கொடுத்தது நான்தான்...” என்ற கடுதாசி அவள் கையில் இருந்தது. இரத்தக் கறைகள் படர்ந்து மொடா வீச்சமெடுத்துக்கொண்டிருக்கிற வீட்டிற்குள் வந்த ஆரியனின் பெற்றோர்கள் செவ்வந்தியின் காலடியில் நிரந்தர மெளனியானார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.