தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாகனச் சோதனைகளில் பல லட்சம் பறிமுதல்

17 Mar 2026, 3:26 pm
வாகனச் சோதனைகளில் பல லட்சம் பறிமுதல்
<p><strong>வாகனச் சோதனைகளில் பல லட்சம் பறிமுதல்</strong></p> <p>கோவை, மார்ச் 17- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவித்த நிலையில், நடத்தை விதி கள் அமலுக்கு வந்துள்ளதால், சோதனையில் &nbsp;ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி கள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து தமிழ்நாடு முழு வதும் பறக்கும் படையினர் தீவிர &nbsp;வாகன சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை தெற்கு சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி களில் தேர்தல் பறக்கும் படை அதி காரிகள் வாகன சோதனை நடத்தி னர். அதில் ப்ரூக்பான்ட் சாலையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியபோது சரக்கு வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த ரசீது என்ற வாலிபரிடம் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது அவர் தனது வாகனத் தில் ரூ.6.50 லட்சம் வைத்திருந்தார். &nbsp;இப்பணத்திற்கு முறையான ஆவ ணங்கள் இல்லாததால் இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் சுங்கம் பகுதியில் மற்றொரு பறக்கும் படையினர் சோதனையிட்ட போது ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட் சம் பறிமுதல் செய்யப்பட்டது. &nbsp;இதேபோல கோவை ராம்நகர் &nbsp;சாஸ்திரி வீதி பகுதியில் பறக்கும் &nbsp;படை சோதனையில் ஆவணங்கள் &nbsp;இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட &nbsp;ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட் டது. தேர்தல் நாமினேஷன் துவங் கும் முன்பே பறக்கும் படை தொடர்ந்து சோதனை செய்வதால் பொதுமக்கள் தரப்பிலிருந்து பல் வேறு தேவைகளுக்காக கொண்டு &nbsp;செல்லப்படும் பணம் ஆவணங்கள் &nbsp;இல்லாத காரணங்களால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு &nbsp;வருகிறது. சேலத்தில் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் சேலம் தெற்கு தொகுதிக்குட் பட்ட தாதகாப்பட்டி காவேரி மருத்து வமனை அருகே, கூட்டுறவு சார்பதி வாளர் உமா தலைமையில் பறக் கும் படையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது லைன் மேடு பகுதியில் இருந்து சீலநாயக் கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு &nbsp;கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய் தனர். அப்போது, லைன்மேடு பகு தியை சேர்ந்த விஜயகுமார் என்ப வர் காரில் ரூ.2 லட்சம் பணம் &nbsp;கொண்டு சென்றது கண்டுபிடிக்கப் பட்டது. பணத்திற்கான உரிய ஆவ ணங்கள் இல்லாததால், அதிகாரி கள் அந்த தொகையை உடனடி யாக பறிமுதல் செய்தனர். பின்னர் &nbsp;உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் &nbsp;வள்ள முனியப்பன் முன்னிலையில் பணம் சீல் வைக்கப்பட்டு &nbsp;மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக் கப்பட்டது. கோபியில் ரூ.2.30 லட்சம் பறிமுதல் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பறக்கும் &nbsp;படையினர் திங்களன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்ஒருபகுதியாக, சிறுவலூர் பகுதியில் தோ்தல் பறக்கும் படை &nbsp;அதிகாரி அருண் தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் &nbsp;ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக பெருந்துறை பகுதியில் தக்காளி விற்பனை செய்துவிட்டு, சரக்கு ஆட்டோவில் வந்த கர்நாட காவை சேர்ந்த மகாதேவன் என்ப வரிடம் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு &nbsp;வந்த ரூ.53,200-ஐ பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர். &nbsp;இதேபோல, பழனிகவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்பிரசாத் பாத்திரங்கள் வாங்குவதற்கு தனது வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.60ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோபி கல்லூரி பிரிவு பகுதியில் நடைபெற்ற சோதனையில் ரூ.51,710 மற்றும் கொடிவேரி பகுதியில் நடைபெற்ற சோதனையில் ரூ.65,400 பறிமுதல் &nbsp;செய்யப்பட்டது. கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், மொத்தம் ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் தருமபுரி மாவட்டம், பாலக் கோடு பகுதியில் தேர்தல் கண் காணிப்பு குழுவினர் வாகனச் சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அவ்வழியாக மாக்கனூரை சேர்ந்த வீரமணி (38) என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.52 லட்சத்தை பறி முதல் செய்தனர். அதேபோல், கொலசனஹள்ளி மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த &nbsp;ரூபா (50) என்பவர் ஓட்டி வந்த &nbsp;காரை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 300 கிராம் &nbsp;எடை கொண்ட 29 எண்ணிக்கை யிலான வெள்ளி பரிசு பொருட் களை பறிமுதல் செய்தனர். அஞ் செட்டியை சேர்ந்த நாராயணசாமி (55) என்பவர் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.99 ஆயிரத்தை பறிமுதல் செய்து, பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத் தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.