தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டியல் சமூகத்தை சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி நந்தனார் கல்விக்கழகம் வரவேற்பு

22 May 2026, 1:35 am
பட்டியல் சமூகத்தை சேர்ந்த  7 பேருக்கு அமைச்சர் பதவி  நந்தனார் கல்விக்கழகம் வரவேற்பு
<p><strong>பட்டியல் சமூகத்தை சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி நந்தனார் கல்விக்கழகம் வரவேற்பு</strong></p><p>​​​​​​​சிதம்பரம், மே 21 - தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியலின் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது என நந்தனார் கல்விக் கழக தலைவர் கே.ஐ. மணிரத்தினம் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் விஜய்க்கு அவர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக அரசின் புதிய அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. சமூக நீதி, சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற கொள்கைகளை முன்னிறுத்தி தமிழக முதல்வர் விஜய் செயல்பட்டு வருவது மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும் வகையில் இந்த அமைச்சரவை அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது வர வேற்கத்தக்கது. தமிழகம் எப்போதும் சமூக நீதி அரசியலின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த அமைச்சரவை அமைந்துள்ளது. பட்டியல் சமூக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள முதல்வர் விஜய்க்கு நந்தனார் கல்விக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.