முந்தய பக்கம்

செவல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம்

23 Sept 2026, 10:11 pm
செவல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம்
<p><strong>செவல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம்</strong></p><p>தென்காசி, செப்.23-தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் செப்டம்பர் 22 அன்று பெருந்தலைவர் காமராஜர் காலைஉணவு திட்டம் விரிவாக்கம் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம்திருவேங்கடம் தாலுகா செவல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 140 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.</p><p>மாணவர்களின் கல்வி மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு தினமும் சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் குருவிகுளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவுன்ராஜ், செவல்குளம் ஊராட்சி செயலாளர் குருசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்தங்கமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் திட்டத்தின்செயல்பாடுகள் குறித்து அலுவலர்கள் பார்வையிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram