முந்தய பக்கம்

உதவி மையம் அமைத்தும் பயனில்லை

19 Nov 2025, 3:33 pm
உதவி மையம் அமைத்தும் பயனில்லை
<p><strong>உதவி மையம் அமைத்தும் பயனில்லை</strong></p> <p>நாமக்கல், நவ.19- திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளுக்கு உதவி மையம் &nbsp;அமைக்கப்படுள்ளது. ஆனால், அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படாத தால், அவர்களும் திணறி வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று வருகிறது. இதற்கென படிவங் கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்தப் படிவங்களை நிரப்புவதற்கு முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் மேற்பார்வையில் சிறப்பு உதவி மையத்தை, நகராட்சி யின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 2002 வாக்கா ளர் பட்டியலில் பாகம் எண் வரிசை எண் தெரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுபவர்கள் இந்த உதவி மையத்தை பயன்படுத்தி, தங்களது வரிசையின் பாகம் என்னை கண்டு பிடித்து படிவங்களை நிரப்ப வசதியாக இந்த மையத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதேநேரத்தில், இந்த உதவி மையங்க ளில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி இல்லாததால் திணறி வருகின்றனர். இவர்கள் திணறுவதை பார்த்து பொதுமக்களும் தங்களின் வாக்குரிமை குறித்த அச்சத் தில் உறைந்து போயிள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram