தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேத்தூர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை சிபிஎம்-சிபிஐ நிர்வாகிகள்-அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஒப்புதல்

19 Jun 2026, 10:02 pm
சேத்தூர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை சிபிஎம்-சிபிஐ நிர்வாகிகள்-அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஒப்புதல்

சேத்தூர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை சிபிஎம்-சிபிஐ நிர்வாகிகள்-அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஒப்புதல்

இராஜபாளையம்,ஜூன் 19- இராஜபாளையம் தாலுகா சேத்தூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அச்சு றுத்தலாக, விதிகளுக்கு புறம்பாக செயல்படும் டாஸ்மாக் கடை யை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் அனை த்து கட்சிகள் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. முதல்வர் அறிவிப்பின்படி தற்போது வரை கடை மூடப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன 25 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கோரிக்கைக்காக போராட்டத்தை அறிவித்திருந்தது.

வியாழக்கிழமையன்று ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளர் தலைமையிலும் வட்டாட்சியர் முன்னிலையிலும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கூட்டத்தில் 717 கடைகள் அறிவிப்பில் சேத்தூர் கடை இடம்பெறவில்லை என டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார். இரண்டு கட்சிகளின் சார்பிலும் இந்த கடையை பட்டியலில் சேர்க்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத இறுதிக்குள் சேத்தூர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாளரும் வட்டாட்சியரும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்ப பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் .மாவட்டக்குழு உறுப்பி னர் ராமர், ஒன்றிய செயலாளர் சந்தனகுமார்,சேத்தூர் நகர செய லாளர் குருநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன் ஆர் எம் மாரியப்பன் ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜா, பகத்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.