தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேத்தூர் எஸ்.பி. செல்லப்பிள்ளை : மக்கள் நெஞ்சில் வாழும் சிவப்புத் துண்டு

7 Jun 2026, 10:27 pm
சேத்தூர் எஸ்.பி. செல்லப்பிள்ளை : மக்கள் நெஞ்சில் வாழும் சிவப்புத் துண்டு

சேத்தூர் எஸ்.பி. செல்லப்பிள்ளை : மக்கள் நெஞ்சில் வாழும் சிவப்புத் துண்டு

விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ராகத் திகழ்ந்த தோழர் எஸ்.பி.செல்லப் பிள்ளை அவர்களின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றையும், அவரது அரசியல் போராட்டங்களையும் விவ ரிக்கும் உன்னதமான ஆவணப் புத்தகமே இந்நூலாகும்.

மார்ச் 2026-இல் மறைந்த தோழர் செல்லப்பிள்ளை அவர்களின் கம்பீரத்தையும், மக்கள் பணியையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வகையில் இதனை உணர்வுப் பூர்வமாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தோழர் கே. அர்ஜுனன்.

தமிழ்நாட்டின் வலிமைமிக்க ஜமீன்களுள் ஒன்றான சேத்தூர் ஜமீனின் ஆதிக்கத்தை எதிர்த்து, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை மற்றும் சமூக நீதிக்காகவும் செல்லப் பிள்ளை நடத்திய களப் போராட்டங் களை இந்நூல் முதன்மையாகப் பேசுகிறது.

தென் மாவட்டங்களில் சாதி யப் பதற்றங்கள் நிலவிய காலகட்டங் களில், தனது கொள்கை பலத்தாலும், தனிப்பட்ட ஆளுமையாலும் சாதிக்கல வரங்கள் வராமல் தடுத்து, மக்களை ஒன்றிணைத்த அமைதித் தூதுவ ராகச் ‘சிவப்புத் துண்டுடன்’ அவர் செயல்பட்டதை நூல் விரிவாக விவரிக்கிறது.

சேத்தூர் பேரூராட்சியின் தலைவ ராக இருந்தபோதும், கம்யூனிசக் கொள்கையிலிருந்து சற்றும் பிறழாமல் இறுதிவரை நேர்மையாகவும், எளிமை யாகவும் வாழ்ந்த அவரது தூய்மை யான அரசியல் வாழ்வு இன்றைய இளைய தலைமுறைக்குச் சிறந்த பாடமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக் குழு வெளியிட்டுள்ள இந்நூலுக்கு, தோழர் பெ. சண்முகம் மற்றும் திரைக் கலைஞர் சமுத்திரக்கனி ஆகியோர் பொருத்தமான அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

தென் மாவட்டங் களின் ஜமீன் ஒழிப்பு மற்றும் கம்யூனிச இயக்கத்தின் அடிமட்டப் போராட்ட வரலாற்றை அறிய விரும்பும் எவருக்கும் இந்நூல் ஒரு சிறந்த களஞ்சியமாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் ஜமீன் எதிர்ப்பு போராளி சேத்தூர் எஸ்.பி. செல்லப் பிள்ளை ஆசிரியர்: கே. அர்ஜுனன் வெளியீடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விருதுநகர் மாவட்டக் குழு விலை: ₹70 தொடர்புக்கு: 9443215593

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.