ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்
23 Jul 2026, 10:14 pm
<p><strong>ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஜூலை 23- சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற நல அமைப்பு (SETC - REWA) சார்பில், கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு புதன்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலத் தலைவர் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் தலைமை தாங்கினார். மாநில உதவிச் செயலாளர் ஜி. ராமையா வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எஸ். ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். டி.என்.எஸ்.டி.சி. புதுக்கோட்டை மண்டலப் பொதுச் செயலாளர் ஆர். மணிமாறன், சம்மேளனத் துணைத் தலைவர் எம். கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கப் பொதுச் செயலாளர் எம். கனகராஜ், ஓய்வு பெற்ற நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். நடராஜன், துணைப் பொதுச் செயலாளர் கே. வாசுதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் போக்கு வரத்து கழகங்களின் வரவு-செலவு வித்தியாசத் தொகையை ஈடுகட்ட மாநில வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். போக்குவரத்து கழகங்களின் மொத்தக் கடனையும் அரசே ஏற்றுக்கொண்டு கடனில் இருந்து விடுவிக்க வேண்டும். ஒப்பந்த முறை யைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, சிஐடியு மாநில வளர்ச்சி நிதிக்கான முதற்கட்டத் தொகையாக ரூ.2,02,800-க்கான நிதியை, அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் அருள்தாஸ், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எஸ். ரெங்கராஜனிடம் வழங்கினார். சம்மேளனப் பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார் நிறைவுரையாற்றினார். அரசு விரைவுப் போக்கு வரத்து ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எம். மகேந்திரன் நன்றி கூறினார்.</p>
