பனை மர ஆராய்ச்சி நிலையம் அமைத்து, பனை பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
21 Dec 2025, 3:21 pm
<p><strong>பனை மர ஆராய்ச்சி நிலையம் அமைத்து, பனை பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை</strong></p>
<p>நாகர்கோவில்,டிச.21- பனை மர ஆராய்ச்சி நிலையம் அமைத்து மருத்துவ குணம் கொண்ட பனைப் பொருட்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குமரி மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி கூறியதாவது: பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைகள் இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படு கிறது. அதன் வாழ்நாள், மனிதனின் சராசரி வயதை விட அதிகம். பனை மரத்தில் மொத்தம் 84 வகை கள் உள்ளன. ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்ப னை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்ப னை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்ப னை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப் பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப் பனை, அலாம்பனை, கொண்டைப் பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப் பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை ஆகும். சந்தையிடலில் சிக்கல் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றில் சிக்கல்கள் உள்ளன. போதிய முத லீடின்மை, தொழிலாளர் எண்ணிக் கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானமே வரு கிறது. இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டி லும் வெளிநாடுகளிலும் தேவை உள்ளது. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடைய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். பனங்கற்கண்டு பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற் கண்டு தயாரித்தல் லாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற் பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழில் வளர்ச்சியும் மேம் படும். உணவு பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத் துறையும் தன்னார்வத் தொண்டகங் களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வள வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு அளித்து, அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது. பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரை கன்னியா குமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவகாலத் தொழி லாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது. கிடப்பில் போடப்பட்ட திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் பனை மரமும், பனைத்தொழிலுக்கும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாகும். தென்னைமர ஆராய்ச்சி மையம் போல் பனைமரம் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். ஆனால் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. கருப்புக்கட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு பொருட்களாக உள்ளது. கருப்புக்கட்டி மற்றும் பதநீர் ஆயுர்வேதம், சித்தா, மருத்துவத்திற்கு மிகவும் பயன்படும் மருத்துவ பொரு ளாக கருப்புக்கட்டி உள்ளது. நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் மிக முக்கிய மான தாவரங்களில் பனைமரம் ஒன்றாகும். பனை மர ஆராய்ச்சி நிலையம் தமிழக அரசின் கீழ் தமிழ்நாடு பனை கூட்டுறவு சம்மேளம், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நலவாரியம் ஆகியவை செயல்படுகிறது. கேரளா மாநிலம் இத்துறையில் சிறப்பான திட் டங்களை செயல்படுத்தி வருகிறது. பெருமை வாய்ந்த இப் பனை மரத்தி னை தென்னை மரத்தினை போன்று ஆராய்ச்சி மையம் அமைத்து அனை த்து விதத்திலும் சிறப்பானதாக மாற்றிட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
