தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லாசுப்பேட்டை நெறிக்குறவர் பேட்டையில் புதிய புறக்காவல் நிலையம் அமைத்திடுக! துணை ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

11 Mar 2026, 4:32 pm
லாசுப்பேட்டை நெறிக்குறவர் பேட்டையில் புதிய புறக்காவல் நிலையம் அமைத்திடுக!  துணை ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>லாசுப்பேட்டை நெறிக்குறவர் பேட்டையில் புதிய புறக்காவல் நிலையம் அமைத்திடுக! &nbsp;துணை ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்</strong></p> <p>புதுச்சேரி, மார்ச் 11- லாசுப்பேட்டை நெறிக்குறவர் பேட்டையில் புதிய புறக்காவல் நிலையம் அமைக்கக் கோரி துணை ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் பெருமாள், சீனுவாசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சரவணன், சஞ்சய் சேகரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட நெறிக்குறவர் மக்களுடன் இணைந்து வழுதாவூர் சாலையில் உள்ள புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் கண்ணபிரானைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியில் நெறிக்குறவர் பேட்டை குடியிருப்பில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் ஆடுகளை ரவுடிகள் திருட முயற்சித்துள்ளனர். மூன்று ஆடுகளைத் திருடிச் சென்றதோடு, ஒரு ஆட்டின் கழுத்தைச் சீவி அங்கேயே கொன்று போட்டுவிட்டுச் சென்றதோடு, இதனைத் தடுத்த அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜுனனை அவர்கள் மதுபான பாட்டி லால் தலையில் மிகக் கொடூரமாகத் தாக்கி யுள்ளனர். இது குறித்து லாசுப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்க, விளிம்பு நிலை யில் வாழும் நெறிக்குறவர் சமூக மக்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் அரசு உறுதி செய்யும் வகையில் அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இருண்டு காணப்படும் நெறிக்குறவர் பேட்டையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டும். முறையான பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். தாக்குதலுக்குள்ளான அர்ஜுன னுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், உயிரிழந்த மற்றும் திருடப்பட்ட கால்நடை களுக்கு உரிய இழப்பீடும் அரசு வழங்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.